தூத்துக்குடியில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்
தூத்துக்குடியில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டனர். 2 பேரை கைது செய்தனர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி சுப்பையா தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(வயது 50). இவர் தூத்துக்குடி தீயணைப்பு நிலைய சந்திப்பு பகுதியில் உள்ள கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை வைத்து விற்பனை செய்து வந்தார். இது குறித்து தகவல் அறிந்த மத்தியபாகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரம் அந்த கடையில் சோதனை நடத்தினார். கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்த தடைசெய்யப்பட்ட 20 புகையிலை பாக்கெட்டுகளை அவர் பறிமுதல் செய்தார். இது தொடர்பாக மத்தியபாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலகிருஷ்ணனை கைது செய்தனர்.
இதே போன்று புதுக்கோட்டை அருகே உள்ள மங்கலகிரி விலக்கு பகுதியில் சுரேஷ்குமார்(35) என்பவர் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்து கொண்டு இருந்தார். அவரை புதுக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகராஜா கைது செய்தார். அவரிடம் இருந்து 10 புகையிலை பாக்கெட்டுகளை அவர் பறிமுதல் செய்தார்.