தனியார் டாக்டர்கள் அரசு ஆஸ்பத்திரிகளில் சேவை செய்வதை ஊக்குவிக்க வேண்டும்

தனியார் டாக்டர்கள் அரசு மருத்துவமனையில் சேவை செய்வதை ஊக்குவிக்கவேண்டும் என்று அரசுக்கு, ஐகோர்ட்டு வலியுறுத்தி உள்ளது.

Update: 2018-07-30 00:24 GMT
மும்பை,

மராட்டியத்தில் உள்ள பெரும்பாலான அரசு மருத்துவமனைகளில் காலி பணியிடங்கள் இன்னும் நிரப் பப்படவில்லை. இதனால் போதிய டாக்டர்கள் இன்றி பல மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன. எனவே அரசு ஆஸ்பத்திரியை தேடிவரும் ஏழை நோயாளிகளுக்கு சரியான நேரத்தில் சிகிச்சை கிடைப்பதில்லை.

இது தொடர்பாக ராகேஷ் பாமாரே என்பவர் மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் பாட்டீல் மற்றும் குல்கர்னி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது இது தொடர்பாக அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் அசுதோஷ் கும்பகோனி ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்தார். அதில், “ நாசிக்கில் உள்ள மாலேகாவ் அரசு ஆஸ்பத்திரியில் ஜூன் மாதம் முதல் அரசு டாக்டர்களுடன் தனியார் மருத்துவமனை டாக்டர் களும் இணைந்து செயல்பட்டு வருவதாக” கூறினார்.

இதுகுறித்து பதில் அளித்த நீதிபதிகள், “இந்த அறிக்கை ஊக்குவிப்பதாக உள்ளது. தேவைப்படும் இடத்தில் ஒருங்கிணைந்து செயல்பட தனியார் மருத்துவர்கள் ஆர்வமுடன் இருப்பதை வெளிப்படுத்தியுள்ளது. இவர்களின் செயலை நாங்கள் வரவேற்கிறோம்.

இதுபோன்ற தனியார் மருத்துவர்களை அரசு ஆஸ்பத்திரி நிர்வாகம் தொடர்ந்து ஊக்கப்படுத் தவேண்டும். இது பொதுநலனுக்காக மற்றொரு படி ஆகும். அரசு ஆஸ்பத்திரி நிர்வாகம் ஏழை நோயாளி களின் நலனுக்காக தொடர்ந்து இதேபோன்று செயல்படும் என்று நம்புகிறோம்.

மாநிலத்தின் மற்ற பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனை களும் இதேபாணியில் செயல்பட்டு பயனடைய முடியும். தனியார் மருத்துவர் கள், அரசு மருத்துவமனைகளில் பணி செய்வதை அரசு ஊக்கப்படுத்தவேண்டும்.” என்றனர்.

மேலும் நீதிபதிகள், அட்வகேட் ஜெனரல் அசுதோஷ் கும்பகோனி யிடம், இதுகுறித்து அரசிடம் பேசி தேவையான நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்