மன்னார்குடியில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
மன்னார்குடியில் இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
சுந்தரக்கோட்டை,
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் கோவில் நிர்வாகத்தை விட்டு அரசு விலக வேண்டும். கோவில் நிர்வாகமே கோவிலை நிர்வகிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு நகர தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் ரமேஷ், மாவட்ட செயலாளர் ராமராஜசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக கோட்டூர் ஒன்றிய பொறுப்பாளர் சுபாஷ் வரவேற்றார். இதில் நகர பொதுச்செயலாளர் மாரிமுத்து, நிர்வாகிகள் செந்தமிழ்செல்வன், சிவராஜ், சுரேஷ், ராகவேந்தர் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். முடிவில் நிர்வாகி பாலாஜி நன்றி கூறினார்.