சென்னை அருகே ஆட்டோ டிரைவர் தலை துண்டித்து கொலை
ஆட்டோ டிரைவர் தலை துண்டித்துக்கொலை செய்யப்பட்டார். உடலை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
சென்னை,
சென்னை அருகேயுள்ள ஊரப்பாக்கம் ராஜீவ்காந்தி நகர் 1-வது தெருவில் நேற்று அதிகாலையில் ஒரு வாலிபரின் துண்டிக்கப்பட்ட தலை ரத்தவெள்ளத்தில் கிடந்தது. இதனை பார்த்த அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இது குறித்து கூடுவாஞ்சேரி போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு கூடுவாஞ்சேரி போலீசார் விரைந்து சென்று பார்த்த போது தலை துண்டித்து கொலை செய்யப்பட்டவர் தாம்பரம் கடப்பேரி முத்துதமிழ் நகரை சேர்ந்த கமலக்கண்ணன் (வயது 30) என்பதும், தாம்பரம் பகுதியில் ஆட்டோ ஓட்டி வந்தார் என்பதும் தெரியவந்தது.
இருப்பினும் கொலை செய்யப்பட்டவர் கமலக்கண்ணன் தான் என்பதை உறுதி செய்வதற்காக போலீசார் கடப்பேரியில் உள்ள அவரது மனைவி சுதாவுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சுதாவிடம் போலீசார் துண்டிக்கப்பட்ட தலையை காண்பித்தார்கள். இதனை பார்த்த சுதா கதறி அழுது தன்னுடைய கணவர்தான் என்று அடையாளம் காட்டினார். அப்போது கமலக்கண்ணின் மனைவி போலீசாரிடம் கூறியதாவது:-
நேற்றுமுன்தினம் இரவு என்னுடைய வீட்டுக்காரர் கமலக்கண்ணன் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். இரவு 11 மணிக்கு அவரது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. இதில் பேசிய பின்னர் என்னுடைய கணவர் உடனடியாக ஆட்டோவில் வீட்டை விட்டு வெளியேறினார். இவ்வாறு சுதா கூறினார்.
இதனையடுத்து போலீசார் துண்டிக்கப்பட்ட தலையை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் காஞ்சீபுரத்தில் இருந்து வந்த மோப்ப நாய் தலை கிடந்த இடத்தில் இருந்து சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இந்த நிலையில் கமலக்கண்ணின் ஆட்டோ குரோம்பேட்டை மேம்பாலத்தின் கீழ் நிற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இது குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர். துண்டிக்கப்பட்ட கமலக்கண்ணின் உடல் காட்டுப்பகுதியில் வீசப்பட்டு இருக்காலம் என்று கருதுகின்றனர். 2 தனிப்படை போலீசார் கிராமங்களை ஒட்டியுள்ள காடுகளில் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கொலை செய்யப்பட்ட கமலக்கண்ணனுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இறந்து போன கமலக்கண்ணன் மீது கூடுவாஞ்சேரி போலீசில் கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
கமலக்கண்ணனின் ஆட்டோ குரோம்பேட்டை மேம்பாலத்தின் கீழ் பகுதியில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. அதே இடத்தில் கமலக்கண்ணன் கொலை செய்யப்பட்டு தலையை மட்டும் துண்டித்து கொலையாளிகள் ஊரப்பாக்கத்தில் வீசிவிட்டு உடலை அருகில் உள்ள காட்டுப்பகுதியில் வீசி இருக்கலாம்.
இந்த கொலை முன்விரோதம் காரணமாக நடந்ததா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது குறித்தும் விசாரணை நடைபெறுகிறது. முதல்கட்டமாக கமலக்கண்ணனின் செல்போனை கைப்பற்றி அதில் யார்? யார்? கமலக்கண்ணனுக்கு போன் செய்துள்ளார்கள் என்பதை ஆய்வு செய்து அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது. இவ்வாறு போலீஸ் உயர் அதிகாரி தெரிவித்தார்.