இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
ஆலைய சிறப்பு தரிசன கட்டணத்தை ரத்து செய்ய கோரி இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.
உடையார்பாளையம்,
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் பஸ் நிலையம் முன்பு ஆலைய சிறப்பு தரிசன கட்டணத்தை ரத்து செய்ய கோரி இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. கோட்ட செயலாளர் ராஜேசேகர் தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் ரமேஷ் வரவேற்றார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஐயம்பெருமாள், மாவட்ட செயலாளர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோட்ட செயலாளர் சிவக்குமார் சிறப்புரையாற்றினார். இந்து முன்னணி பொறுப்பாளர்கள் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் செந்துறை ஒன்றிய தலைவர் சத்தியபிரகாசம் நன்றி கூறினார்.