திருப்பூர் மாநகராட்சி முன்பு காந்திய மக்கள் இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காந்திய மக்கள் இயக்கம் சார்பில் நேற்று திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்ட நடைபெற்றது.

Update: 2018-07-29 22:15 GMT

திருப்பூர்,

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும், லோக் ஆயுக்தாவை வலிமைப்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, காந்திய மக்கள் இயக்கம் சார்பில் நேற்று காலை திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்ட நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில தலைவர் கந்தசாமி தலைமை தாங்கி பேசினார். மாநகர தலைவர் கருப்பசாமி முன்னிலை வகித்தார். இதில் திருப்பூர் சாய ஆலை உரிமையாளர்கள் சங்க தலைவர் நாகராஜன், ஈரோடு மாவட்ட தலைவர் பெரியசாமி உள்பட ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷமிட்டனர்.

மேலும் செய்திகள்