குமரி மாவட்ட ரெட்கிராஸ் இயக்க கிளைக்கு 15 நிர்வாகக்குழு உறுப்பினர்கள் தேர்வு
குமரி மாவட்ட ரெட்கிராஸ் இயக்க கிளைக்கு 15 நிர்வாகக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில் இந்தியன் ரெட்கிராஸ் இயக்க கிளை செயல்பட்டு வருகிறது. இந்த இயக்கத்துக்கு 3 ஆண்டுக்கு ஒருமுறை புதிய நிர்வாக குழு உறுப்பினர் தேர்தல் நடைபெறுவது வழக்கம். குமரி மாவட்ட இந்தியன் ரெட்கிராஸ் இயக்க நிர்வாகிகளுக்கு பதவிக்காலம் ஏற்கனவே நிறைவடைந்ததை தொடர்ந்து, புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட வருவாய் அலுவலர் சங்க கட்டிடத்தில் நடந்தது. தேர்தலை, கண்காணிப்பு அதிகாரிகளான கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் கோமதி நாயகம் (வளர்ச்சி), சுகன்யா (பொது) ஆகியோர் நடத்தினர்.
குமரி மாவட்ட இந்தியன் ரெட்கிராஸ் இயக்கத்தில் மொத்தம் 759 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். தேர்தலில், நிர்வாகக்குழு உறுப்பினர் பதவிக்கு 41 பேர் வேட்பாளர்களாக போட்டியிட்டனர். புதிய நிர்வாகிகள் தேர்வுக்கான வாக்குப்பதிவு காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணி வரை நடந்தது. இதையொட்டி அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
தொடர்ந்து மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குகள் எண்ணப்பட்டது. தேர்தலில், மொத்தம் 6 ஆயிரத்து 990 வாக்குகள் பதிவாகி இருந்தது. இதில், 729 வாக்குகள் செல்லாதவையாகும். பின்னர், மாலை 6 மணிக்கு தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டன.
இதில், நாகர்கோவில் ரோஜாவனம் முதியோர் இல்ல இயக்குனர் அருள்கண்ணன், பேராசிரியர்கள் அய்யப்பன், கிறிஸ்துதாஸ் வில்லியம்ஸ், டால்பின்ராஜா, ஜார்ஜ், வள்ளியூர் பெட் என்ஜினீயரிங் கல்லூரி நிர்வாக அறங்காவலர் ஹமீது, நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவக்கல்லூரி முன்னாள் முதல்வர் ஜேம்ஸ் ஆர்.டேனியல், திங்கள்நகரை சேர்ந்த போலீஸ் நண்பர்கள் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெயகர், தக்கலை பி.எஸ்.டி. எஜூகேசன் இன்ஸ்டிடியூட் தலைவர் குமாரதாஸ், தக்கலை கல்வி மாவட்ட ஜே.ஆர்.சி. கன்வீனர் லெஸ்லின், முன்னாள் முதன்மைக்கல்வி அதிகாரி மேரி ஜெசிரோச், ஓய்வு பெற்ற மருத்துவ அதிகாரி மோகன், குழித்துறை ரோட்டரி சங்க தலைவர் ரமேஷ்குமார், நாகர்கோவில் ஹீலிங் தெரபிஸ்ட் சிவகுமார், புலியூர்குறிச்சி ஓய்வுபெற்ற ஓவிய ஆசிரியர் விஜயகுமாரன் நாயர் ஆகிய 15 பேர் கொண்ட ஒரே அணியினர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட னர்.வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு, மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே தலைமையிலான கூட்டத்தில் சான்றிதழ் வழங்கப்பட்டு பாராட்டு தெரிவிக்கப்படும். தொடர்ந்து, குமரி மாவட்ட இந்தியன் ரெட்கிராஸ் இயக்கத்தின் தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிக்கான தேர்வு நடைபெறும்.