குறிஞ்சி விழா நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் - கலெக்டர் தலைமையில் நடந்தது
கொடைக்கானலில் குறிசி விழா நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் டி.ஜி.வினய் தலைமையில் நடந்தது.
கொடைக்கானல்,
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர்கள் இந்த ஆண்டு கொடைக்கானல் நகரின் பல்வேறு பகுதிகளில் அதிக அளவில் பூத்துள்ளது. இதையொட்டி மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத் துறையின் சார்பாக குறிஞ்சி விழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவினை சிறப்பாக நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் நகர்மன்ற கூடத்தில் மாவட்ட கலெக்டர் டி.ஜி.வினய் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் ஆர்.டி.ஓ. மோகன், நகராட்சி ஆணையாளர் முருகேசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மகேந்திரன், பட்டுராஜன், சுற்றுலா அலுவலர் உமாதேவி, முன்னாள் நகரசபை தலைவர் ஸ்ரீதர், ரோட்டரி சங்க தலைவர் செல்வக்குமார், நிர்வாகி சாந்த சதீஸ், குறிஞ்சி அரிமா சங்க வட்டார தலைவர் ராஜேஸ்கண்ணா மற்றும் சமூக ஆர்வலர்கள், பல்வேறு அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலெக்டர் பேசும்போது கூறியதாவது:-
கொடைக்கானல் பகுதியில் இந்த ஆண்டு கோக்கர்ஸ்வாக், குறிஞ்சி நகர், பெருமாள் மலை, கூக்கால் போன்ற பல்வேறு பகுதிகளில் அதிக அளவு குறிஞ்சி மலர்கள் பூத்துள்ளது. இதனையொட்டி குறிஞ்சி விழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதனை சுற்றுலா பயணிகள் அறிந்து கொள்ளும் வண்ணம் வழிகாட்டி புத்தகங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்படும். மேலும் குறிஞ்சி மலர்களை பற்றிய புகைப்படங்கள் குறித்து ஒரு மாதம் கண்காட்சி பிரையண்ட் பூங்காவில் நடத்தப்படும். பூங்காவில் எல்.இ.டி. திரை அமைத்து அதில் குறிஞ்சி மலர்கள் குறித்து விளக்கப்படும். கேரளாவில் குறிஞ்சி வேலி என்ற விழா நடத்துவது போல இங்கும் நடத்த ஏற்பாடு செய்யப்படும். இவ்வாறு கலெக்டர் கூறினார்.
கூட்டத்தில் குறிஞ்சி மலர்கள் குறித்து புகைப்படங் கள் எடுத்து அதற்கான போட்டி வைக்க வேண்டும். சுற்றுலா பயணிகளுக்காக குறிஞ்சி நடைபயிற்சி என்ற திட்டத்தை கொண்டு வர வேண்டும். குறிஞ்சி நிலங்களை பாதுகாப்பதுடன் அதன் பரப்பளவை அதிகரிக்க வேண்டும். விதைகளை சேகரம் செய்து 2030-ம் ஆண்டு அதிக அளவில் குறிஞ்சி மலர்கள் பூக்க செய்ய வேண்டும் என பல்வேறு கருத்துகள் தெரிவிக்கப்பட்டது. முடிவில் மக்கள் தொடர்பு அலுவலர் முகமது சாலி நன்றி கூறினார்.
இதைத்தொடர்ந்து கொடைக்கானல் கோக்கர்ஸ் வாக் பகுதியில் பூத்துள்ள குறிஞ்சி மலர்களை கலெக்டர் பார்வையிட்ட பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், கோடை குறிஞ்சி விழா அடுத்த வாரம் முதல் தொடர்ந்து 10 வாரங்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கொண்டாடப்படும். இதற்காக அரசு ரூ.5 லட்சம் நிதி வழங்கியுள்ளது. கோக்கர்ஸ்வாக் பகுதியில் பூத்துள்ள குறிஞ்சி மலர்களை அருகில் சென்று பார்க்க நடைபாதை உடனடியாக அமைக் கப்படும் என்றார்.