நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை: முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடியாக உயர்வு
முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்மழை பெய்து வருவதால் அணையின் நீர்மட்டம் 136 அடியாக உயர்ந்துள்ளது.
தேனி,
தமிழக-கேரள மாநில எல்லையில் முல்லைப்பெரியாறு அணை அமைந்துள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் நீராதாரமாக இந்த அணை திகழ்கிறது. இந்த அணையின் மொத்த நீர்மட்டம் 152 அடி ஆகும். அணையை பலப்படுத்தும் பணிக்காக, கடந்த 1979-ம் ஆண்டு அணையின் நீர்மட்டம் 136 அடியாக குறைக்கப்பட்டது.
அணை பலப்படுத்தும் பணி முடிந்தபிறகும், நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த கேரள அரசு முட்டுக்கட்டை போட்டது. இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டில் நடந்த வழக்கில் கடந்த 2014-ம் ஆண்டு நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்திக் கொள்ள தீர்ப்பு வழங்கப்பட்டது. மேலும் பேபி அணையை பலப்படுத்திவிட்டு, நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்திக் கொள்ளவும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பில் கூறப்பட்டது.
இதையடுத்து கடந்த 2014, 2015-ம் ஆண்டுகளில் அணையின் நீர்மட்டம் 142 அடியாக உயர்ந்தது. அதன்பிறகு போதிய மழைப்பொழிவு இல்லாததால் கடந்த 2 ஆண்டுகளாக நீர்மட்டம் 142 அடியை எட்டவில்லை. இந்த நிலையில் இந்த ஆண்டு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் நீர்மட்டம் கிடு, கிடுவென உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் காலை 6 மணியளவில் அணையின் நீர்மட்டம் 135.95 அடியாக இருந்தது. தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து உள்ளதால் நேற்று நீர்மட்டம் 136 அடியை எட்டியது. நேற்று காலையில் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2 ஆயிரத்து 256 கன அடியாக இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரத்து 300 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.
அணையில் நீர் இருப்பு 6 ஆயிரத்து 105 மில்லியன் கன அடியாக அதிகரித்தது. அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.