தேன்கனிக்கோட்டையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டம்

இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தேன்கனிக்கோட்டை வனச்சரக அலுவலகம் எதிரே முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

Update: 2018-07-28 22:30 GMT
தேன்கனிக்கோட்டை,

இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தேன்கனிக்கோட்டை வனச்சரக அலுவலகம் எதிரே முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு தளி முன்னாள் எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். இதில், மாநில குழு உறுப்பினர்கள் சுந்தரவள்ளி, நஞ்சப்பா, பூதட்டியப்பா, முகுந்தன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

பசவனபுரம் கிராமத்தில் பல ஆண்டுகளாக குடியிருக்கும் பொதுமக்களின் வீடுகளை காலி செய்ய வேண்டும் எனவும், தேன்கனிக்கோட்டையில் சாலையோர சிறு வியாபாரிகளின் கடைகளை அகற்ற வேண்டும் எனவும் கூறும் வனச்சரக அலுவலரை கண்டித்து இந்த போராட்டம் நடைபெற்றது. 

மேலும் செய்திகள்