திருப்பைஞ்சீலி நீலிவனேஸ்வரர் கோவில் சாமி சிலைகளை காண்பிக்ககோரி கிராம மக்கள் வாக்குவாதம்
திருப்பைஞ்சீலி நீலிவனேஸ்வரர் கோவிலில் வைக்கப்பட்டுள்ள சாமி சிலைகளை காண்பிக்ககோரி அதிகாரிகளுடன் கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சமயபுரம்,
மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருப்பைஞ்சீலி நீலிவனேஸ்வரர் கோவிலில் சோமாஸ்கந்தர், விநாயகர், சந்திரசேகர், வள்ளி தெய்வானை, சிவகாமி, நடராஜர் சிலைகள் உள்பட ஐம்பொன்னால் ஆன 28 உற்சவர் சிலைகள் உள்ளன. தினமும் காலையில் உற்சவ மூர்த்திகளுக்கு அபிஷேகம் நடைபெறும். மேலும்் கோவிலில் நடைபெறும் திருவிழா காலங்களில் பல்வேறு வாகனங்களில் உற்சவர்கள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பர்.
இந்நிலையில் இந்த கோவிலின் கட்டுப்பாட்டில் உள்ள அழகியமணவாளத்தில் இருக்கும் சுந்தரராஜ பெருமாள் கோவிலில் இருந்த சுமார் 3 அடி உயரம் உள்ள அழகிய மணவாளன் பெருமாள், பிள்ளையாளம்மன் மற்றும் சுமார் 2 அடி உயரம் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய 4 உற்சவர் சிலைகளையும் கடந்த ஆண்டு பாதுகாப்பு கருதி கிராமத்தில் உள்ள முக்கியஸ்தர்கள் உதவியுடன் கோவில் நிர்வாகம் திருப்பைஞ்சீலி நீலிவனேஸ்வரர் கோவிலுக்கு கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் இக்கோவிலுக்கு வந்து ஆய்வு செய்தது பக்தர்களை அச்சமடைய செய்துள்ளது. இதனால், இக்கோவிலில் வைக்கப்பட்டுள்ள அழகிய மணவாளத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட ஐம்பொன்னாலான 4 சிலைகளையும் பார்க்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்ததையடுத்து நேற்று மாலை அவர்களை கோவிலுக்கு வருமாறு செயல் அலுவலர் ஹேமலதா கூறியதாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து அந்த கிராமத்தை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் 50-க்கும் மேற்பட்டோர் மாலை 3 மணிக்கு கோவில் அலுவலகத்திற்கு வந்தனர்.
இதுகுறித்து அறிந்த இந்து சமய அறநிலையத்துறை திருச்சி மண்டல இணை ஆணையர் கல்யாணி, உதவி ஆணையர் ராணி, மண்ணச்சநல்லூர் பகுதி கோவில் ஆய்வாளர் தமிழ்ச்செல்வி ஆகியோர் கோவிலுக்கு வந்தனர். அவர்கள் கிராம மக்களை அழைத்து பேசினர். இதைத்தொடர்ந்து சுமார் 3 மணிநேரம் காத்திருந்த கிராம மக்கள் அதிகாரிகளுடன் சிலையை காண்பிக்க கோரி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து இணை ஆணையர் சென்னையில் உள்ள ஆணையரிடத்தில் தொலைபேசி வாயிலாக பேசினார். பின்னர் மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் அனுமதி கொடுத்தால்தான் சிலையை காட்ட முடியும் என்று அரசின் சட்ட திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் அதிகாரிகள் விளக்கி கூறினர்.
இதில், திருப்தி அடையாத பொதுமக்கள் சிலைகளை பார்க்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில் ஆடிமாதம் உற்சவர் சிலைகளுக்கு தாங்கள் பூஜை செய்ய வேண்டும். அதற்காக வாவது எங்களுக்கு சிலைகளை கொடுக்க வேண்டும் என்று கூறி இணை ஆணையரிடம் மனு அளித்துவிட்டு கலைந்து சென்றனர். இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில் எங்கள் ஊர் சிலைகள் பாதுகாப்பாக உள்ளனவா? என்பதை ஐ.ஜி பொன்மாணிக்கவேல் உறுதி செய்து பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.