போக்குவரத்து சப்–இன்ஸ்பெக்டரை தாக்கிய ஆட்டோ டிரைவர் கைது
வாகன சோதனையில் ஈடுபட்ட போக்குவரத்து போலீஸ் சப்–இன்ஸ்பெக்டரை தாக்கி, பிளேடால் கையை கிழித்த ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார்.
அடையாறு,
திருவான்மியூர் சிக்னல் அருகே நேற்று முன்தினம் இரவு போக்குவரத்து போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் அப்துல்மஜீத்(வயது 52) வாகனசோதனையில் ஈடுபட்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு ஆட்டோவை சோதனை செய்வதற்காக நிறுத்தினார்.
அப்போது ஆட்டோ டிரைவர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரை சப்–இன்ஸ்பெக்டர் அப்துல்மஜீத், போலீஸ் நிலையம் வரும்படி அழைத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த ஆட்டோ டிரைவர், சப்–இன்ஸ்பெக்டருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
மேலும் அப்துல்மஜீத்தை கையால் தாக்கியதுடன், பிளேடால் அவரது கையில் வெட்டிவிட்டு ஆட்டோ டிரைவர் தப்பி ஓடிவிட்டார். இதில் காயம் அடைந்த சப்–இன்ஸ்பெக்டர் அப்துல்மஜீத், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
இதற்கிடையில் திருவான்மியூர் இன்ஸ்பெக்டர் கிறிஸ்டின் ஜெயசில், தப்பி ஓடிய ஆட்டோ டிரைவரை பெரியார் நகர் அருகே மடக்கி பிடித்து கைது செய்தார்.
விசாரணையில் அவர், திருவான்மியூர் பெரியார் நகரைச் சேர்ந்த பார்த்தசாரதி(21) என்பது தெரிய வந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கைதான பார்த்தசாரதியை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.