கோவில்பட்டியில் வெளிநாடுகளுக்கு தீப்பெட்டி பண்டல்களை அனுப்பும் பணி தீவிரம்
லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டதை தொடர்ந்து கோவில்பட்டி பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து தீப்பெட்டி பண்டல்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதிக்காக அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கோவில்பட்டி,
லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டதை தொடர்ந்து கோவில்பட்டி பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து தீப்பெட்டி பண்டல்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதிக்காக அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
வேலைநிறுத்தம் வாபஸ்பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி. (சரக்கு, சேவை வரி) வரம்புக்குள் கொண்டு வர வேண்டும். நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளை அகற்றி விட்டு, ஆண்டுக்கு ஒரு முறை சுங்க கட்டணம் வசூலிக்க வேண்டும், 3–ம் நபர் காப்பீடு கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி, லாரி உரிமையாளர்கள் கடந்த 20–ந்தேதியில் இருந்து நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் கோவில்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள தீப்பெட்டி தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்பிலான தீப்பெட்டி பண்டல்கள் தேக்கம் அடைந்தன. நேற்று முன்தினம் மத்திய அரசுடன் லாரி உரிமையாளர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
லாரிகளில் ஏற்றும் பணி மும்முரம்இதையடுத்து 8 நாட்களுக்கு பிறகு கோவில்பட்டி பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து தீப்பெட்டி பண்டல்களை வெளிநாடுகளுக்கும், வெளிமாநிலங்களுக்கும் அனுப்பும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக தீப்பெட்டி பண்டல்களை லாரிகளில் ஏற்றி, தூத்துக்குடி துறைமுகத்துக்கு கொண்டு சென்றனர். இதேபோன்று வெளிமாநிலங்களுக்கும் தீப்பெட்டி பண்டல்களை லாரிகளில் ஏற்றி விற்பனைக்காக அனுப்பி வைத்தனர்.
நாளை (திங்கட்கிழமை) முதல் தொழிற்சாலைகளில் வழக்கம்போல் தீப்பெட்டி உற்பத்தி நடைபெறும் என்று நேஷனல் சிறிய தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்க தலைவர் பரமசிவம், செயலாளர் சேதுரத்தினம் ஆகியோர் தெரிவித்தனர்.