கோவில்பட்டியில் டாக்டர்கள் ஆர்ப்பாட்டம் தேசிய மருத்துவ ஆணையம் அமைக்க எதிர்ப்பு

தேசிய மருத்துவ ஆணையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கோவில்பட்டியில் நேற்று தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்,

Update: 2018-07-28 22:00 GMT

கோவில்பட்டி, 

தேசிய மருத்துவ ஆணையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கோவில்பட்டியில் நேற்று தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்,

மருத்துவ ஆணையத்துக்கு எதிர்ப்பு

மத்திய அரசு தேசிய மருத்துவ ஆணையம் கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தனியார் ஆஸ்பத்திரிகளில் பணியாற்றும் இந்திய மருத்துவ சங்கத்தை சேர்ந்த டாக்டர்கள் நேற்று காலை 6 மணியில் இருந்து மாலை 6 மணி வரையிலும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையொட்டி கோவில்பட்டியில் உள்ள 40–க்கு மேற்பட்ட தனியார் ஆஸ்பத்திரிகளில் வெளிநோயாளிகள் பிரிவில் டாக்டர்கள் சிகிச்சை மேற்கொள்ளவில்லை. இதனால் தனியார் ஆஸ்பத்திரிகளில் நேற்று வெளிநோயாளிகள் சிகிச்சை பிரிவு செயல்படவில்லை. இந்த ஆஸ்பத்திரிகளில் அவசர சிகிச்சை பிரிவில் மட்டும் டாக்டர்கள் வழக்கம்போல் பணியாற்றினர்.

ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரி நுழைவு வாயில் அருகில் டாக்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய மருத்துவ சங்க தலைவர் டாக்டர் சீனிவாசன் தலைமை தாங்கினார். சங்க மாவட்ட செயலாளர் டாக்டர் மோசஸ் பால், சங்க செயலாளர் டாக்டர் மாறன், பொருளாளர் டாக்டர் கமலா மாரியம்மாள் மற்றும் டாக்டர்கள் கலந்து கொண்டனர். அரசு ஆஸ்பத்திரியில் வெளிநோயாளிகள் பிரிவு உள்ளிட்ட அனைத்து பிரிவுகளிலும் டாக்டர்கள் வழக்கம்போல் பணியாற்றினர்.

மேலும் செய்திகள்