ஒவ்வொரு நாளும் ரூ. 1200 கோடி வருமானம்!

அமேசான் நிறுவனரும், அதன் தலைமை செயல் அதிகாரியுமான ஜெப் சோசின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டு ஒவ்வொரு நாளும் ரூ. 1200 கோடி அளவுக்கு அதிகரித்திருக்கிறது.

Update: 2018-07-28 07:22 GMT
உலகிலேயே மிகப் பெரிய பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்திருப்பவர், ஜெப் ெபசோஸ். இவரது சொத்து மதிப்பு 150 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (ரூபாய் மதிப்பில், 7 லட்சத்து 70 ஆயிரம் கோடி!).

அதாவது, 49 ஏழைநாடுகளின் ஜி.டி.பி. (மொத்த உள்நாட்டு உற்பத்தி) மதிப்பைக் காட்டிலும் ஜெப் ெபசோசின் சொத்து மதிப்பு அதிகம்.

உலகப் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ள பில்கேட்சை விட ஜெப் ெபசோசுக்கு 56.7 பில்லியன் டாலர்கள் சொத்து அதிகம் உள்ளது.

கடந்த 1998-ம் ஆண்டு ஒரு பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த இவரது சொத்து மதிப்பு சுமார் 20 ஆண்டுகளில் 150 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

கடந்த ஆண்டில் மட்டும் ஒவ்வொரு நாளும் ரூ. 1200 கோடி அளவுக்கு ஜெப் ெபசோசின் சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது.

இது பண மழையல்ல, பண அடைமழை! 

மேலும் செய்திகள்