சொத்துவரி உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்

சொத்துவரி உயர்வை திரும்பபெற வலியுறுத்தி ராமநாதபுரத்தில் தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2018-07-27 22:15 GMT

ராமநாதபுரம்,

தமிழக அரசு உள்ளாட்சி அமைப்புகளில் சொத்து வரியை உயர்த்தியுள்ளதை கண்டித்தும், அதனை திரும்ப பெற வலியுறுத்தியும் தி.மு.க. சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதன்படி ராமநாதபுரம் நகராட்சி அலுவலகம் முன்பு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு தி.மு.க. உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலன், முன்னாள் எம்.பி.பவானி ராஜேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ. முருகவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இன்பாரகு, முன்னாள் நகரசபை கவுன்சிலர் அய்யனார், நகர் செயலாளர் கார்மேகம், பெருநாழி போஸ், மருத்துவ அணி செயலாளர் டாக்டர் ஆசிக் அமீன், பொதுக்குழு உறுப்பினர் பி.டி.ராஜா, ராமநாதபுரம் ஒன்றிய செயலாளர் பிரபாகரன், மாவட்ட துணை செயலாளர்கள் கருப்பையா, சுஜாதா கணேசன், அவை தலைவர் ஆனிமுத்து, முன்னாள் யூனியன் தலைவர் நல்லசேதுபதி, மண்டபம் ஒன்றிய பொறுப்பாளர் ஜீவானந்தம் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இதில் சொத்துவரி உயர்வுக்கு கண்டனம் தெரிவித்தும், வரி உயர்வை திரும்பப்பெற வேண்டும் என்றும், உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்த வலியுறுத்தியும் கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன.

மேலும் செய்திகள்