ஈரோடு மாவட்டத்தில் சொத்து வரி உயர்வை கண்டித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

ஈரோடு மாவட்டத்தில் சொத்து வரி உயர்வை கண்டித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

Update: 2018-07-27 23:00 GMT

ஈரோடு,

நகராட்சி, பேரூராட்சிகளில் வரி உயர்த்தியதை கண்டித்து தமிழகம் முழுவதும் நேற்று தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன்படி ஈரோடு மாவட்டத்திலும் நடந்தது.

கோபி நகராட்சி முன்பு தி.மு.க. கூட்டணி கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு நகர தி.மு.க. செயலாளர் நாகராஜன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சரவணன், தி.மு.க. மருத்துவ அணியை சேர்ந்த டாக்டர் செந்தில்நாதன், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியை சேர்ந்த சிவராஜ், தி.க.வை சேர்ந்த சீனிவாசன் மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.

இதேபோல் கோபி ஒன்றிய தி.மு.க. சார்பில் கொளப்பலூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றிய செயலாளர் முருகன் தலைமை தாங்கினார். இதில் கூட்டணி கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

சத்தியமங்கலம் நகர தி.மு.க. சார்பில் பஸ் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு நகர தி.மு.க. பொறுப்பாளர் ஆர்.ஜானகிராமசாமி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ஆர்.ரங்கசாமி, எஸ்.கே.ராஜேந்திரன், நகர பொறுப்புக்குழு உறுப்பினர் எஸ்.ஆர்.கோபால்சாமி, இளைஞர் அணி நாசீர், தொழில் சங்க நிர்வாகி மணிகண்டன், முன்னாள் கவுன்சிலர் பழனிச்சாமி உள்பட 100 பேர் கலந்து கொண்டனர்.

சத்தியமங்கலம் அருகே உள்ள அரியப்பம்பாளையம் பேரூராட்சி அலுவலகம் முன்பு தெற்கு ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர் கே.சி.பி.இளங்கோ தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் அரியப்பம்பாளையம் பேரூர் தி.மு.க. பொறுப்பாளர் வக்கீல் செந்தில்நாதன், மாவட்ட பிரநிதிதி மாணிக்கம், கிளை தி.மு.க. செயலாளர்கள் நாகேஷ் (உக்கரம்), சதாசிவம்(செண்பகபுதூர்) உள்பட 150–க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

புஞ்சைபுளியம்பட்டி நகர தி.மு.க. சார்பில் பஸ் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு நகர தி.மு.க. செயலாளர் பி.ஏ.சிதம்பரம் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் நகராட்சி தலைவர் பி.எஸ்.அன்பு, முன்னாள் பவானிசாகர் ஒன்றிய தலைவர் பி.கே.விசுவநாதன் உள்பட 150–க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

அந்தியூர் ஒன்றிய தி.மு.க.வினர் ஒன்றிய செயலாளர் ஏ.ஜி. வெங்கடாச்சலம் தலைமையில் அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் முன்பு ஒன்று கூடினார்கள். பின்னர் அங்கிருந்து கோ‌ஷங்கள் எழுப்பிக்கொண்டு ஊர்வலமாக அந்தியூர் பேரூராட்சி அலுவலகம் சென்றனர். அங்கு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அதைத்தொடர்ந்து தி.மு.க.வினர், அந்தியூர் பேரூராட்சி செயல் அதிகாரி வில்லியம் ஜேசுதாசிடம் மனு வழங்கினார். ஆர்பாட்டத்தில் மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் கே.பி.எஸ்.மகாலிங்கம், மாவட்ட சிறுபான்மை பிரிவு அணி அமைப்பாளர் சோபியாஷேக், துணை அமைப்பாளர் செபாஸ்தியன், முன்னாள் எம்.எல்.ஏ. குருசாமி, முன்னாள் அந்தியூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் கிருஷ்ணமூர்த்தி உள்பட தி.மு.க.வினர் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

அம்மாபேட்டை ஒன்றிய தி.மு.க. சார்பில் பேரூராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றிய செயலாளர் கே.எஸ்.சரவணன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் பேரூர் தி.மு.க. செயலாளர் எஸ்.பெரியநாயகம், முன்னாள் ஒன்றிய செயலாளர் பி.சேகர், பொதுக்குழு உறுப்பினர் மு.சம்பத்குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

நம்பியூர் ஒன்றிய தி.மு.க. சார்பில் ஒன்றிய பொறுப்பாளர் பி.செந்தில்குமார் தலைமையில் பேரூராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் நம்பியூர் நகர செயலாளர் ஆனந்தகுமார், ஒன்றிய பொருளாளர் சண்முகம், பொதுக்குழு உறுப்பினர் சரஸ்வதி, ஒன்றிய துணை செயலாளர் மைக் பழனிச்சாமி, வர்த்தக அணி செயலாளர் வேலுச்சாமி, மாவட்ட பிரதிநிதி செல்வராஜ்200–க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தாளவாடி பஸ் நிலையம் அருகே ஒன்றிய தி.மு.க. செயலாளர் டி.சிவண்ணா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தி.மு.க.வினர் 50–க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்