உயர்மின் கோபுர திட்டத்துக்கு விவசாயிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்
உயர்மின் கோபுர திட்டத்துக்கு விவசாயிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் அன்பழகன் தெரிவித்தார்.
கரூர்,
கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கி, விவசாயம் தொடர்பான குறைகளை கேட்டறிந்தார். கூட்டத்தில் கருப்பம்பாளையத்தை சேர்ந்த விவசாயி ராமலிங்கம் பேசுகையில், அமராவதி ஆற்றில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தண்ணீர் திறந்து விடப்பட்ட போதும் சில வாய்க்கால்கள் தூர்வாரப்படாததன் காரணத்தால் தண்ணீரை பாசனத்திற்காக சில இடங்களுக்கு கொண்டுவர முடியாத சூழல் ஏற்பட்டது. அந்த வகையில் கோயம்பள்ளி வாய்க்கால் தூர்வாரப்படாததால் அங்கு விவசாய பணிகள் பாதிப்படைகிறது. எனவே சோமூர் பகுதி வரைக்கும் செல்லும் அந்த வாய்க்காலை விரைவில் தூர்வார வேண்டும் என்று கூறினார்.
மகாதானபுரத்தை சேர்ந்த விவசாயி ஜெயபால் பேசுகையில், வாழை சாகுபடியில் சில நேரங்களில் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. இதனை தவிர்க்கும் பொருட்டு நேரடியாக விவசாயிகளிடமிருந்து வாழைத்தாரை அரசு கொள்முதல் செய்ய வேண்டும். பின்னர் பள்ளிகளில் மதிய உணவுடன் சேர்த்து முட்டை வழங்குவதை போல் வாழைப்பழத்தையும் வழங்க வேண்டும் என்று கூறினார்.
பசுமை ஆறு விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த நரிக்காட்டு வலசு ராஜமாணிக்கம் பேசுகையில், கரூர் நொய்யல் ஆற்றில் வரும் சாயக்கழிவுநீரை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஒரு தனியார் நிறுவனத்தில் இருந்து இரவு நேரங்களில் ஆசிட் உள்ளிட்டவற்றை மாசு ஏற்படுத்தும் வகையில் ஆற்றின் சில இடங்களில் கொட்டி விட்டு செல்கின்றனர். இதனை கண்காணித்து அந்த நிறுவனம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சாயக்கழிவால் பாதிப்படைந்த விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று கூறினார்.
விவசாயிகள் கீழவெளியூர் அள்ளிராணி, பொன்னிப்பட்டி பழனிசாமி உள்ளிட்டோர் விவசாய கிணறு மற்றும் பூந்தோட்டத்திற்கு மின் இணைப்பு வழங்குவது தொடர்பான கோரிக்கை குறித்து பேசினர். அப்போது அதற்கு பதில் அளித்து பேசிய கலெக்டர் அன்பழகன், சட்டவிதிகளின் படி விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் தான் மின் இணைப்பு வழங்கும் பணிகள் தொடர்ந்து நடக்கிறது. உங்கள் கோரிக்கைகள் குறித்து பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் தற்போது தொழில்நிறுவனம், அலுவலகம், வீடு உள்ளிட்டவற்றிற்காக கரூரில் மின்தேவை அதிகரித்து விட்டது. அந்த வகையில் ஒடிசாவில் இருந்து பவர்கிரிட் எனும் நிறுவனம் மூலம் உயர்மின் கோபுரம் அமைக்கும் திட்டம் மூலம் 6,000 மெகாவாட் மின்சாரம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.
எனவே கரூரில் உள்ள விவசாய நிலங்களில் அந்த உயர்மின் கோபுரத்தை சில கிலோ மீட்டர் தூரம் அமைக்க விவசாயிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இதனால் விவசாயத்திற்கு பாதிப்பு ஏதும் ஏற்படாது. நிலத்தின் ஓரமாக தான் இந்த கோபுர கம்பம் நடப்படுகிறது. ஆட்சேபனை ஏதும் இருப்பின் அதற்கு மாற்று ஏற்பாடு செய்யப்படும். இந்த திட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும். ஒரு தென்னை மரத்திற்கு கூட ரூ.40 ஆயிரம்- ரூ.60 ஆயிரம் வரை இழப்பீடு வழங்கப்படுவதாக தெரிகிறது. நமக்கு தற்போது கிடைக்கும் மின்சாரம் கூட ஏதோ ஒரு விவசாய நிலத்தின் வழியாக செயல்படுத்தப்படுகிற மின்திட்டத்தின் மூலமாக தான் கிடைக்கிறது என்பதை மறுக்க முடியாது. எனவே வதந்திகளை நம்ப வேண்டாம். இதனை ஒரு பணிவான வேண்டுகோளாக வைக்கிறேன் என்று தெரிவித்தார். மேலும் விவசாய சங்க பிரதிநிதிகள் கோரிக்கை குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் பதில் கூறினார்.
இக்கூட்டத்தில் வேளாண்மை மற்றும் அதை சார்ந்த துறைகளின் சார்பில் செயல்படுத்தப்பட்டுவரும் திட்டங்கள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் விரிவாக எடுத்துரைத்தனர். பின்னர் விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளும், அதற்கான சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களின் விளக்கங்களும் அனைவருக்கும் தெரிவிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் வருவாய் கோட்டாட்சியர்கள் சரவணமூர்த்தி (கரூர்), லியாகத் (குளித்தலை), வேளாண்மை இணை இயக்குனர் ஜெயந்தி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சீனிவாசன் உள்பட அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.