கருப்புக்கு தனி மதிப்பு

உலகிலேயே மிக அதிக விலை கொண்ட கோழி அயாம் சிமானி.

Update: 2018-07-27 08:54 GMT
இந்தோனேஷியாவில் வளர்க்கப்படும் அயாம் சிமானி கோழிகளின் உடல் காகத்தைப் போன்று கறுப்பாக இருக்கின்றன. உடல் மட்டுமல்ல, கோழியின் தோல், இறைச்சி அனைத்தும் கருப்பாகவே காணப்படுகிறது. மரபணுவிலேயே மெலனின் குறைபாடு இருப்பதால் கோழியின் நிறம் கருப்பாக இருக்கிறது. ஆனால் இந்த அரிய வகை கோழியின் நிற மாறுபாட்டுக்கு மருத்துவ, ஆன்மிகக் காரணங்களைக் கூறி வருவதால் அதன் விலை அதிகமாகிவிட்டது. வசதி படைத்தவர்கள் மட்டுமே அயாம் சிமானி கோழியின் இறைச்சியை உண்ண முடியும். கோழிக் குஞ்சுயின் விலை 13 ஆயிரம் ரூபாய். முதிர்ந்த கோழி 64 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பிட்ட சூழலில் வளர்க்க வேண்டியிருப்பதால், ஆண்டுக்கே சில நூறு கோழிகள் மட்டுமே ஒரு பண்ணையில் இருந்து விற்பனை செய்யப்படுகின்றன. 

மேலும் செய்திகள்