ஊத்தங்கரை அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை உதவி கலெக்டர் விசாரணை
ஊத்தங்கரை அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக கிருஷ்ணகிரி உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
ஊத்தங்கரை,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள வண்ணாம்பள்ளியை சேர்ந்தவர் சிலம்பரசன் (வயது 28). பொக்லைன் டிரைவர். இவருடைய மனைவி சரண்யா (23). இவர்களுக்கு கடந்த 4 ஆண்டு களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். சிலம்பரசன் குடித்து விட்டு வந்து மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்ததாக தெரிகிறது.
மேலும் சிலம்பரசனும், அவருடைய தாயும் சேர்ந்து வரதட்சணை கேட்டு சரண்யாவை கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் மன முடைந்த நிலையில் காணப்பட்டார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சரண்யா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த ஊத்தங்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சரண்யாவுக்கு திருமணம் ஆகி 4 ஆண்டுகளே ஆவதால் இது தொடர்பாக கிருஷ்ணகிரி உதவி கலெக்டர் சரவணன் விசாரணை நடத்தி வருகிறார்.