கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு செங்கல் சூளைகளில் தண்ணீர் புகுந்தது
அய்யம்பேட்டை அருகே கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு செங்கல் சூளைகளில் தண்ணீர் புகுந்தது.
அய்யம்பேட்டை,
தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை மற்றும் சுற்று வட்டார கிராமங்கள் வழியாக கொள்ளிடம் ஆறு செல்கிறது. கொள்ளிடம் ஆற்றின் கரையில் வீரமாங்குடி, தேவன்குடி, பட்டுக்குடி, கூடலூர், புத்தூர், குடிகாடு உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் செங்கல் சூளைகள் அதிகமாக உள்ளன.
கல்லணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்பட்ட தண்ணீர் நேற்று அதிகாலை அய்யம்பேட்டை பகுதியை வந்தடைந்தது. கொள்ளிடம் ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பட்டுக்குடி, கூடலூர், வீரமாங்குடி உள்ளிட்ட பகுதிகளில் இயங்கி வந்த செங்கல் சூளைகளில் தண்ணீர் புகுந்தது.
இதன் காரணமாக சூளைகளில் தயார் செய்து வைக்கப்பட்டிருந்த சுடப்படாத செங்கற்கள் நீரில் கரைந்து வீணாகின. இதனால் செங்கல் உற்பத்தியாளர்கள் வேதனை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-
கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் வருகிறது என்று தெரிந்தவுடன் தயார் செய்து வைத்திருந்த சுடப்படாத செங்கற்களை, சுடுவதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தோம். திடீரென தண்ணீர் வந்து விட்டதால் சுடப்படாத செங்கற்கள் அனைத்தும் நீரில் மூழ்கி வீணாகின. இதனால் மிகுந்த இழப்பு ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.