லாரி உரிமையாளர்கள் 7-வது நாளாக வேலை நிறுத்தம்: மிளகாய் வத்தல் உள்ளிட்ட பொருட்கள் வரத்து இல்லை
லாரி உரிமையாளர்கள் 7-வது நாளாக நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கோட்டார் சந்தையில் வெல்லம் தட்டுப்பாடு ஏற்பட்டதோடு, மிளகாய் வத்தல், மல்லி உள்ளிட்ட மளிகை பொருட்களும் வரவில்லை.
நாகர்கோவில்,
நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்றி விட்டு, ஆண்டுக்கு ஒருமுறை சுங்க கட்டணம் வசூலிக்கும் முறையை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற லாரிகள் வேலைநிறுத்த போராட்டம் கடந்த 20-ந் தேதி தொடங்கியது. நேற்று 7-வது நாளாக லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் நீடித்தது. லாரிகள் வேலை நிறுத்தத்தால் குமரியில் இருந்து வெளிமாநிலங்களுக்கு ஏற்றி செல்லப்படும் பொருட்கள் தேக்கம் அடைந்து உள்ளன.
உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள் குடோன்களிலேயே தேங்காய், தும்பு, ரப்பர் ஷீட், ரப்பர் பால், கயிறு போன்ற பொருட்களும், ஏலக்காய், கிராம்பு, மிளகு உள்ளிட்ட நறுமண பொருட்களும் 75 கோடி ரூபாய் அளவில் தேக்கம் அடைந்துள்ளன. இந்த நிலை தொடர்ந்தால் ரப்பர் பால் எடுக்கும் பணி, கயிறு திரிக்கும் பணி, தேங்காய் உரிக்கும் பணி, தும்பு தயாரிக்கும் பணி போன்றவை அடியோடு நிறுத்தப்படும் நிலை உருவாகும் என்று லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இந்த போராட்டத்தால் வெளிமாநில காய்கறிகள் மற்றும் பழ வகைகளின் வரத்து குறைந்துள்ளது. இதனால் அவற்றின் விலை உயர்ந்துள்ளது. உள்மாவட்ட காய்கறிகளின் வரத்து வழக்கம்போல் உள்ளது. மேலும் வெளிமாநில மளிகை பொருட்கள் வரத்து இல்லாததால் மளிகை பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. லாரி புக்கிங் ஏஜெண்டுகளும் போராட்டத்தில் இறங்கியுள்ளதால் மதுரை போன்ற பகுதிகளில் இருந்து வரக்கூடிய உணவு பொருட்களும் வரவில்லை.
இதுதொடர்பாக குமரி மாவட்டத்தின் பாரம்பரியமிக்க சந்தையாக திகழும் கோட்டார் சந்தையின் மொத்த வியாபாரி ஒருவர் கூறியதாவது:-
கோட்டார் சந்தையில் உள்ள மொத்த கடைகளுக்கு பல வெளிமாநிலங்களில் இருந்து மளிகை பொருட்கள் லாரிகள் மூலம் வருகின்றன. குறிப்பாக மிளகாய் வத்தல் ஆந்திர மாநிலம் குண்டூரில் இருந்தும், மல்லி ராஜஸ்தான் மாநிலம் குண்டக்கல் பகுதியில் இருந்தும், மத்தியபிரதேச மாநிலத்தில் இருந்து வெள்ளைப்பூண்டு, புனேவில் இருந்து பல்லாரி, உஞ்சா பகுதியில் இருந்து கடுகு, சீரகம், வெந்தயம் ஆகிய மளிகை பொருட்கள் விற்பனைக்காக கொண்டுவரப்படுகின்றன.
கடந்த 7 நாட்களாக லாரி உரிமையாளர்கள் அகில இந்திய அளவில் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் மேற்கண்ட மாநில பகுதிகளில் இருந்து மளிகை பொருட்கள் எதுவும் வரவில்லை. இதேபோல் மதுரை ராஜபாளையம் போன்ற பகுதிகளில் இருந்து வெல்லம் வரும். லாரி புக்கிங் ஏஜெண்டுகள் வேலை நிறுத்தத்துக்கு ஆதரவாக இருப்பதால் வெல்லமும் வரவில்லை. இதனால் கோட்டார் சந்தையில் தற்போது வெல்லம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறைவான அளவில் ஒரு சில வியாபாரிகளிடம் மட்டுமே வெல்லம் உள்ளது. இதேபோல் சர்க்கரை ஆலைகளில் இருந்து வரவேண்டிய சீனியும் வரவில்லை.
தற்போதைய நிலையில் இன்னும் ஒரு வார காலத்துக்கு மட்டுமே கோட்டார் சந்தையில் சீனி உள்ளிட்ட மளிகை பொருட்கள் இருப்பில் உள்ளன. இன்னும் ஒரு வாரத்துக்கு மேலாக லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் தொடர்ந்தால் மளிகை பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படுவதுடன், மேலும் விலை உயர்வும் ஏற்பட வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.