மாணவர்கள் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர 11-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்

அரியலூர் மாவட்டங்களில் உள்ள மாணவர்கள் அரசு தொழிற்பயிற்சியில் சேர வருகிற 11-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

Update: 2018-07-26 22:15 GMT
அரியலூர்,

2018-ம் ஆண்டில் அரசு தொழிற்பயிற்சி நிலையங் களில் சேரவும், அரசு உதவி பெறும் தனியார் தொழிற் பயிற்சி நிலையங்கள் மற்றும் சுயநிதி தனியார் தொழிற் பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் மாணவர்கள் சேர்ந்திடவும், இரண்டாம் மாவட்ட கலந்தாய்வு மூலம் நடைபெறும் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் நேற்று முன்தினம் முதல் வருகிற 11-ந்தேதி வரை www.ski-l-lt-r-a-i-n-i-ng.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். தொழிற்பயிற்சி நிலையங்களில் ஆகஸ்டு மாதம் முதல் தொடங்கும் பல்வேறு பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத தொழிற்பிரிவுகளில் சேர்ந்து பயிற்சி பெற 8-ம் வகுப்பு தேர்ச்சி, 10-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தமிழகத்தில் உள்ள தொழிற்பயிற்சி நிலைய விவரங்கள், தொழிற்பிரிவுகள், இவற்றிற்கான கல்வித்தகுதி, வயது வரம்பு, இட ஒதுக்கீடு ஆகியவை இணையதளத்தில் உள்ள விளக்க கையேட்டில் தரப்பட்டுள்ளன. மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும் மாவட்ட கலந்தாய்வுக்கான தர வரிசை பட்டியல் மற்றும் கலந்தாய்வு நடைபெறும் நாள், தேதி, இடம் உள்ளிட்ட விவரங்கள் இதே இணைய தளத்தில் வெளியிடப்படும். மேலும் இணையதள விண்ணப்பத்தின்போது தெரிவிக்கப்பட்ட செல்போன் எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். இணைய தளத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும், எந்தந்த தொழிற்பயிற்சி நிலையங்களில் மாவட்ட கலந்தாய்வு நடைபெறும் என்ற விவரம் தரப்பட்டுள்ளது. கலந்தாய்வு நடைபெறும் நாளில் மாணவர்கள் Si-n-g-le Wi-n-d-ow முறையில் தாங்கள் சேர விரும்பும் தொழிற்பிரிவு மற்றும் தொழிற்பயிற்சி நிலையம் ஆகியவற்றை மாவட்ட கலந்தாய்வில் கலந்துகொண்டு தேர்வு செய்யலாம்.

அரியலூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் உள்ள காலியிட விவரங்கள் வருமாறு:- பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்-14, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்(முஸ்லிம்)-13, தாழ்த்தப்பட்ட வகுப்பினர்-2 என மொத்தம் 29 காலியிடங்கள் உள்ளன. மேலும், பெரம்பலூர் மாவட்டத்தை மாணவர்கள் இதுகுறித்து பெரம்பலூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்துக்கு நேரில் சென்றும், 04328-290590, 9443693437, 9941752604 என்ற எண்களிலும், git-i-p-e-r-a-m-b-a-lur@gm-a-il.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவும் தொடர்பு கொண்டு விவரம் பெறலாம்.

இந்த தகவலை பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்