மராத்தா போராட்டத்தில் மாநிலம் முழுவதும் 3-வது நாளாக வன்முறை - துப்பாக்கி சூடு; கண்ணீர் புகை குண்டு வீச்சு
மராத்தா இடஒதுக்கீடு போராட்டத்தில் மாநிலம் முழுவதும் 3-வது நாளாக வன்முறை ஏற்பட்டது.
மும்பை,
மராத்தா இடஒதுக்கீடு போராட்டத்தில் மாநிலம் முழுவதும் நேற்று 3-வது நாளாக வன்முறை ஏற்பட்டது. வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டும், கண்ணீர் புகை குண்டுகள் வீசியும் போராட்டக்காரர்கள் கலைக்கப்பட்டனர். கல்வீச்சில் போலீஸ் சூப்பிரண்டு காயம் அடைந்தார்.
கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு கேட்டு போராட்டம் நடத்தி வரும் மராத்தா சமுதாய மக்கள் மாநிலம் முழுவதும் போராட்டத்தை தீவிரப்படுத்தி உள்ளனர். நேற்று மும்பை, தாேன, பால்கர், ராய்காட் மாவட்டங்களில் முழு அடைப்பு நடந்தது. இதே நேரத்தில் மாநிலத்தின் மற்ற பகுதிகளிலும் நேற்று 3-வது நாளாக வன்முறை நீடித்தது.
அகமதுநகர், அகோலா உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு இடங்களிலும் வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. நாசிக்கில் வாகன போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தன. போராட்டக்காரர்கள் அங்குள்ள ஒரு ஏ.டி.எம். மையத்துக்குள் நுழைந்து ஏ.டி.எம். எந்திரத்தை கற்களை வீசி உடைத்து நொறுக்கினார்கள்.
துலேயில் கலெக்டர் அலுவலக கட்டிடத்தின் மீது ஏறி மராத்தா சமுதாயத்தை சேர்ந்த ஜிஜேந்திரா என்ற வாலிபர் தற்கொலை மிரட்டல் விடுத்தார். போலீசார் ஓடிச்சென்று அவரை மீட்டனர். சாங்கிலியில் கிருஷ்ணா ஆற்றில் இறங்கி அந்த சமுதாயத்தை சேர்ந்த ஏராளமானோர் ஜலசமாதி ஆகப்போவதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு உண்டானது.
சத்தாராவில் நடந்த கல்வீச்சில் போலீஸ் சூப்பிரண்டு சந்தீப் பாட்டீல் காயம் அடைந்தார். அவர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். வன்முறையாளர்களை கலைக்க கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டது. மேலும் வானத்தை நோக்கி போலீசார் துப்பாக்கியால் சுட்டனர். நவிமும்பை கலம்பொலியில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வர்கள் சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 போலீஸ் வாகனங்களுக்கு தீ வைத்தனர்.
வன்முறையில் ஈடுபட்டவர் கள் மீது போலீசார் ரப்பர் குண்டுகளால் சுட்டனர். கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கூட்டத்தை கலைத்தனர். கல்வீச்சில் 3 போலீசார் காயம் அடைந்தனர். நவிமும்பை கலம்பொலியில் மும்பை- புனே நெடுஞ் சாலையை போராட்டக்காரர் கள் மறித்தனர். பால்கர் மாவட்டம் நாலச்சோப்ராவில் திறந்து இருந்த கடைகளை மராத்தா சமுதாயத்தினர் அடித்து நொறுக்கினார்கள். தானே கோகலே சாலையில் உள்ள கடைகள் வலுக்கட்டாயமாக இழுத்து மூடப்பட்டன.
மத்திய ரெயில்வே வழித்தடத்தில் தானே, கன்சோலி ரெயில் நிலையங்களிலும், மேற்கு ரெயில்வே வழித்தடத்தில் உள்ள ஜோகேஸ்வரி ரெயில் நிலையத்திலும் தண்டவாளத்தில் இறங்கி ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், மந்திரி சந்திரகாந்த் பாட்டீல் ஆகியோர் மராத்தா சமுதாய மக்களின் உணர்வுகளை அவமதித்து விட்டதாக கூறி, கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள்.
ரெயில் மறியல் காரணமாக சிறிது நேரம் ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை ரெயில்வே போலீசார் அப்புறப்படுத்தினார்கள். நவிமும்பை துர்பேயில் மாத்தாடி தொழிலாளர்கள் மராத்தா சமுதாயத்தினருக்கு ஆதரவாக வேலை நிறுத்தம் செய்தனர். இதன் காரணமாக ஏ.பி.எம்.சி. மார்க்கெட் மூடப்பட்டு இருந்தது. இதேபோல மும்பை, தானே உள்ளிட்ட பகுதிகளில் காய்கறி சந்தைகள் மூடியிருந்தன.