ஊதியம், பென்சன் வழங்கக்கோரி பள்ளி கல்வித்துறை முன்பு தர்ணா போராட்டம்

ஊதியம், பென்சன் வழங்கக்கோரி பள்ளி கல்வித்துறை முன்பு தர்ணா போராட்டம் நடத்துவோம் என புதுவை அரசு நிதி உதவி பெறும் பள்ளி ஆசிரியர் மற்றும் ஊழியர் கூட்டமைப்பு செயலாளர் கூறியுள்ளார்.

Update: 2018-07-25 22:30 GMT

புதுச்சேரி,

புதுவை அரசு நிதி உதவி பெறும் பள்ளி ஆசிரியர் மற்றும் ஊழியர் கூட்டமைப்பு செயலாளர் மார்ட்டின் கென்னடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

7–வது ஊதியக்குழு பரிந்துரைகளை அரசு நிதி உதவி பெறும் ஆசிரியர், ஊழியர் மற்றும் பென்சன்தாரர்களுக்கு உடனடியாக அமல்படுத்த வேண்டும், கடந்த 2 ஆண்டுகளாக வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள 5 மாத ஊதியம் மற்றும் பென்சன் தொகையை உடனடியாக வழங்க வேண்டும், மாத ஊதியம் மற்றும் பென்சன் மாத இறுதி வேலை நாளில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், 5 மாத கால ஊதியம் மற்றும் பென்சன் வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் வருகிற 31–ந் தேதி மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை பள்ளி கல்வித்துறை முன்பு தர்ணா போராட்டம் நடத்த உள்ளோம்.

அதையடுத்து 2, 3–ந் தேதிகளில் அரசு நிதி உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் அவரவர் பணிபுரியும் பள்ளிகளில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளனர்.

இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்