பெங்களூரு புறநகர் ரெயில் திட்டத்திற்கு ஒரு மாதத்தில் தனி அமைப்பு - குமாரசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு
பெங்களூரு புறநகர் ரெயில் திட்டத்திற்கு ஒரு மாதத்தில் தனி அமைப்பை உருவாக்குவது என்று முதல்-மந்திரி குமாரசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
பெங்களூரு,
பெங்களூரு புறநகர் ரெயில் திட்டம் குறித்து முதல்-மந்திரி குமாரசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் நிதி ஆயோக், ரெயில்வேத்துறை, மற்றும் மாநில அரசின் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில், பெங்களூரு புறநகர் ரெயில் திட்டத்தை செயல்படுத்த ஒரு தனி அமைப்பை உருவாக்க முடிவு செய்யப்பட்டது. ஒரு மாதத்தில் இந்த அமைப்பு உருவாக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
அந்த தனி அமைப்பில் மாநில அரசு சார்பில் 51 சதவீதமும், ரெயில்வேத்துறை சார்பில் 49 சதவீதமும் பங்கு முதலீடு செய்யப்படும். இதற்காக மாநில அரசு ரூ.350 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இதில் ரூ.100 கோடி ரெயில்வேத்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் பெங்களூரு நகரில் உள்ள 444 கிலோ மீட்டர் நீள ரெயில்வே பாதையை பயன்படுத்திக்கொள்வது என்று தீர்மானிக்கப்பட்டது.
சில இடங்களில் புதிதாக பாதைகளை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது. ரெயில் பாதை அனைத்தும் மின்மயமாக்கப்படும். ரூ.1745 கோடி செலவில் 116 ரெயில்களை இந்த திட்டத்தில் பயன்படுத்துவது குறித்தும் அதிகாரிகள் ஆலோசனை கூறினர். இந்த கூட்டத்தில் துணை முதல்-மந்திரி பரமேஸ்வர், வருவாய்த்துறை மந்திரி ஆர்.வி.தேஷ்பாண்டே, தொழில்துறை மந்திரி கே.ஜே.ஜார்ஜ், உயர்கல்வித்துறை மந்திரி ஜி.டி.தேவேகவுடா, பொதுப்பணித்துறை மந்திரி எச்.டி.ரேவண்ணா, தலைமை செயலாளர் விஜயபாஸ்கர் உள்பட பல்வேறு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தனி அமைப்பு(ஸ்பெஷல் பர்பஸ் வெயிகல்) என்பது பெங்களூரு மெட்ரோ ரெயில் கழக நிறுவனத்தை போன்றது ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.