கொழும்புவில் இருந்து கோவை வந்த விமானத்தில் இஸ்திரி பெட்டி, டி.வி.க்குள் மறைத்து வைத்து 1 கிலோ தங்கம் கடத்தல் 2 பேர் பிடிபட்டனர்

கொழும்புவில் இருந்து கோவை வந்த விமானத்தில் இஸ்திரி பெட்டி, டி.வி.க்குள் மறைத்து வைத்து 1 கிலோ தங்க கட்டிகளை கடத்தி வந்த 2 பேர் பிடிபட்டனர்.

Update: 2018-07-25 22:15 GMT

கோவை,

கொழும்புவில் இருந்து கோவைக்கு ஏர் அரேபியா விமானம் வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளின் உடமைகள் பரிசோதனை செய்யப்பட்டன. அப்போது மின்சார இஸ்திரி பெட்டி மற்றும் 3 டி.வி.க்களை அதிகாரிகள் ஸ்கேன் செய்தனர். அப்போது அதன் உள்ளே தங்க கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

மொத்தம் ஒரு கிலோ 100 கிராம் எடையுள்ள 20 தங்க கட்டிகள் இருந்தன. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ.34 லட்சத்து 10 ஆயிரம் ஆகும்.

தங்க கட்டிகளை கடத்தி வந்ததாக சென்னை தண்டையார் பேட்டையை சேர்ந்த அன்சாரி (வயது 38), கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த முகமது அலீப் ஆகியோர் பிடிபட்டனர். இவர்கள் கடத்தி வந்த தங்க கட்டிகள் மற்றும் இஸ்திரி பெட்டி, டி.வி.க்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்