காரைக்குடி, மானாமதுரை, விருதுநகர் வழியாக சென்னை எழும்பூரிலிருந்து செங்கோட்டைக்கு வாராந்திர சிறப்பு ரெயில்

சென்னை எழும்பூரில் இருந்து திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, மானாமதுரை, விருதுநகர் வழியாக செங்கோட்டைக்கு திங்கட்கிழமைகளில் வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

Update: 2018-07-25 22:15 GMT

விருதுநகர்,

சென்னை எழும்பூரில் இருந்து திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, மானாமதுரை, விருதுநகர் வழியாக செங்கோட்டைக்கு வருகிற 6– ந் தேதி முதல் செப்டம்பர் மாதம் 24–ந் தேதிவரை திங்கட்கிழமைகளில் வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. சென்னையில் இருந்து திங்கட்கிழமைதோறும் இரவு 8.40 மணிக்கு புறப்படும் ரெயில் மறுநாள் காலை 6.20–க்கு விருதுநகருக்கு வரும். 9.20–க்கு செங்கோட்டையை சென்றடையும். மறுமார்க்கத்தில் செவ்வாய்க்கிழமைதோறும் மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு இரவு 7 மணிக்கு விருதுநகர் வந்து மறுநாள் அதிகாலை 5.20 மணிக்கு சென்னை எழும்பூரை சென்றடையும்.

மேலும் செய்திகள்