இன்சூரன்சு நிறுவனத்தில் 685 பணியிடங்கள்

நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவனத்தில் உதவியாளர் பணிக்கு 685 இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

Update: 2018-07-25 07:31 GMT
பொதுத் துறை காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்று நியூ இந்தியா அஸ்யூரன்ஸ். தற்போது இந்த நிறுவனத்தில் அசிஸ்டன்ட் (உதவியாளர்- கிளாஸ்-3) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 685 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இட ஒதுக்கீடு அடிப்படையில் பொதுப் பிரிவினருக்கு 375 இடங்களும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 113 இடங்களும், எஸ்.சி. பிரிவினருக்கு 105 இடங்களும், எஸ்.டி. பிரிவினருக்கு 60 இடங்களும் உள்ளன. மேலும் 32 பின்னடைவுப் பணியிடங்களும் நிரப்பப்படுகிறது. இந்த பணியிடங்களில் தமிழகத்திற்கு மட்டும் 83 இடங்கள் உள்ளன. ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள பணியிட விவரங்களை முழுமையான விளம்பர அறிவிப்பில் பார்க்கலாம்.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம் :-

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 30-6-2017-ந் தேதியில் 21 வயது பூர்த்தி அடைந்தவர்களாகவும், 30 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். அதாவது 1-7-1988 மற்றும் 30-6-1997 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதி முறைகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.

கல்வித்தகுதி:

ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். அவர்கள் ஆங்கிலத்தை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும்.

கட்டணம்

பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.600 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மாற்றுத் திறனாளிகள், முன்னாள் படைவீரர்கள் ஆகியோர் ரூ.100 கட்டணம் செலுத்தினால் போதுமானது.

தேர்வு செய்யும் முறை:

எழுத்துத் தேர்வு மற்றும் மண்டல மொழித்தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வு பிரிமிலினரி தேர்வு, மெயின் தேர்வு என இரு நிலைகளில் தேர்வு நடைபெறும். அதில் தேர்ச்சி பெறுபவர்கள் மண்டல மொழியறிவு சோதனைக்குப் பின்பு பணியில் சேர்க்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணைய தளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 31-7-2018-ந் தேதி விண்ணப்பிக்க கடைசிநாளாகும். இதற்கான முதல்நிலை எழுத்துத் தேர்வு செப்டம்பர் 8,9-ந் தேதிகளில் நடத்த உத்தேசிக்கப்பட்டு உள்ளது. முதன்மைத் தேர்வு அக்டோபர் 6-ந் தேதி நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.newindia.co.in என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கவும். 

மேலும் செய்திகள்