டெல்லியில் 3-வது நாளாக முகாம்: துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு, ராகுல்காந்தியுடன் புதுச்சேரி எம்.எல்.ஏ.க்கள் சந்திப்பு
புதுச்சேரியை சேர்ந்த அனைத்துக்கட்சி எம்.எல்.ஏ.க்களும் முதல் - அமைச்சர் நாராயணசாமி தலைமையில் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். நேற்று துணை ஜனாதிபதி மற்றும் ராகுல்காந்தியை சந்தித்து பேசிய அவர்கள் மாநில அந்தஸ்து வழங்கும் கோரிக்கையை வலியுறுத்தினர்.
புதுச்சேரி,
தற்போது புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக ஒலிக்க தொடங்கியுள்ளது. இதுகுறித்து சட்டசபையில் அனைத்துக்கட்சி எம்.எல்.ஏ.க்களும் வலியுறுத்தினர். இதைத்தொடர்ந்து பிரதான எதிர்க்கட்சியான என்.ஆர். காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக்கட்சி எம்.எல்.ஏ.க்களும் டெல்லி சென்று பிரதமர் மற்றும் தலைவர்களை சந்தித்து இந்த கோரிக்கையை வலியுறுத்துவது என முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து புதுவை அமைச்சர்கள், காங் கிரஸ், அ.தி.மு.க., தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் குழுவினர் கடந்த 22-ந்தேதி டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றனர். இதற்கான ஏற்பாடுகளை செய்வதற்காக முன்கூட்டியே முதல்-அமைச்சர் நாராயணசாமி டெல்லி சென்று இருந்தார். ஆனால் என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அவர்களுடன் செல்லாமல் புறக்கணித்தனர்.
டெல்லியில் நேற்று முன் தினம் உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங், துணை சபாநாயகர் தம்பிதுரை, கனிமொழி எம்.பி. மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் பாராளுமன்ற கட்சி தலைவர்களை சந்தித்து புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று எம்.எல்.ஏ.க்கள் குழுவினர் வலியுறுத்தினர்.
டெல்லியில் 3-வது நாளாக முகாமிட்டு இருந்த இந்த குழுவினர் நேற்று காலை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவை சந்தித்து பேசினார் கள். அப்போது புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மனு அளித்தனர். அதை பெற்றுக்கொண்ட துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
மேலும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், தெலுங்கு தேசம் கட்சியின் ராஜ்யசபா தலைவர் சி.எம்.ரமேஷ் எம்.பி. ஆகியோரையும் சந்தித்து புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைப்பதற்கு ஆதரவு கோரினர். தொடர்ந்து அவர்கள் மத்திய நிதித்துறை மந்திரி பியுஷ் கோயலை சந்தித்து பேசினர். அப்போது புதுவை எம்.எல்.ஏ.க்களுடன் அமைச்சரும் மாநில காங்கிரஸ் தலைவருமான நமச்சிவாயம் உடனிருந்தார்.
இதன்பின் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை அவர்கள் சந்தித்தனர். அப்போது அவரிடம் மாநில அந்தஸ்து கிடைக்கும் வகையில் பாராளுமன்றத்தில் வலியுறுத்துமாறு கேட்டுக் கொண்டனர். டெல்லி பயணத்தை முடித்துக் கொண்டு புதுச்சேரி எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் டெல்லியில் இருந்து இன்று (புதன்கிழமை) புதுச்சேரிக்கு திரும்ப உள்ளனர்.