விதான சவுதாவுக்குள் இடைத்தரகர்கள் நடமாட்டம்: பார்வையாளர்களுக்கு கட்டுப்பாடு - முதல்மந்திரி குமாரசாமி அறிவிப்பு
விதான சவுதாவுக்குள் இடைத் தரகர்கள் நடமாட்டம் இருப்பதால், பார்வையாளர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதிக்க அரசு முடிவு செய்து இருப்பதாக குமாரசாமி அறிவித்தார்.
பெங்களூரு,
முதல்-மந்திரி குமாரசாமியை பெங்களூரு விதான சவுதாவில் பிரபல மென்பொருள் தயாரிப்பு நிறுவனமான விப்ரோவின் தலைவர் அசிம் பிரேம்ஜி நேற்று நேரில் சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்புக்கு பின் குமாரசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
“பெங்களூருவில் காற்று மாசுவை தடுக்க புதிய தொழில்நுட்பத்தை விப்ரோ நிறுவனம் உருவாக்கி இருக்கிறது. அந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நகரில் காற்று மாசுவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக அந்த நிறுவனம் உறுதி அளித்துள்ளது. இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மாநிலம் முழுவதும் காற்று மாசுவை கட்டுப்படுத்துவது குறித்தும் அசிம் பிரேம்ஜியுடன் ஆலோசனை நடத்தினேன்.
மூலதனமே இல்லாமல் விவசாயம் செய்யும் தொழில்நுட்பத்தையும் விப்ரோ நிறுவனம் உருவாக்கி இருக்கிறது. ஆந்திராவில் அந்த முறை நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. அதேபோல் கர்நாடகத்திலும் விவசாய உற்பத்தியில் அந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்த உதவுமாறு அவரிடம் நான் கேட்டேன். அதை அவர் ஏற்றுக்கொண்டுள்ளார். பெங்களூரு சர்ஜாபுரா சாலை பழுதாகி இருப்பதாக அவர் என்னிடம் கூறினார். அந்த சாலையை உடனே சரிசெய்யும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.
மந்திரி ரேவண்ணா தனது அரசு பங்களாவில் எந்த புதுப்பிப்பு பணிகளையும் செய்யவில்லை. மந்திரிகள் அரசு பங்களாவில் எந்த கட்டுமான பணிகளையும் செய்யக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளேன். அவசியம் என்றால் மட்டும் பணிகளை செய்யுமாறு அறிவுறுத்தி இருக்கிறேன். வாஸ்துப்படி அரசு பங்களாவில் சில கட்டுமான பணிகளை செய்வதாக வெளியான தகவல்கள் தவறானவை.
முந்தைய பொதுப்பணித்துறை மந்திரி அந்த பங்களாவில் சில புதுப்பிப்பு பணிகளை செய்ய உத்தரவிட்டு இருந்தார். அந்த பணிகள் தான் தற்போது நடந்து வருகிறது. விதான சவுதா கட்டிடம் பாதுகாப்பு வளையத்தில் உள்ளது. அதனால் பார்வையாளர்கள் உள்ளே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. உரிய அனுமதி சீட்டு பெற்று விதான சவுதாவுக்குள் வர தடை இல்லை. விதான சவுதாவுக்குள் நுழைய பத்திரிகையாளர்களுக்கு தடை விதிக்கவில்லை. இதுகுறித்து விதான சவுதா போலீஸ் துணை கமிஷனருக்கு உத்தரவிட்டுள்ளேன்.
விதான சவுதாவுக்கு அனுமதி பெற்று வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. மேலும் விதான சவுதாவுக்குள் இடைத்தரகர்கள் நடமாட்டம் இருப்பது குறித்து ரகசிய கண்காணிப்பு கேமரா காட்சிகள் ஆதாரத்துடன் போலீசார் தெரிவித்து உள்ளனர். இதில் எச்சரிக்கையாக இருக்கும்படி அதிகாரிகளுக்கு நான் அறிவுறுத்தி உள்ளேன்.
விதான சவுதாவில் கூட்டம் அதிகரித்து இருப்பதால், மந்திரிகள் மற்றும் அதிகாரிகள் தங்களின் பணியை மேற்கொள்வதில் இடையூறு ஏற்படுகிறது. சில சட்டவிரோத செயல்களை தடுக்கும் நோக்கத்தில் விதான சவுதாவுக்கு வரும் பார்வையாளர்களுக்கு சில புதிய கட்டுப்பாடுகளை விதிக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.
பத்திரிகையாளர்கள் சந்திப்பு கூட்டத்தை நடத்த விதான சவுதாவில் தனியாக ஒரு அறையை ஒதுக்கி கொடுக்கிறேன். உங்களுக்கு ஏதாவது தகவல்கள் தேவைப்பட்டால், சம்பந்தப்பட்ட மந்திரிகளோ அல்லது துறை அதிகாரிகளோ நேரில் வந்து உங்களுக்கு தகவல்களை அளிப்பார்கள். அதற்கான நடவடிக்கையை எடுக்கிறேன்.
நீங்கள் கைகளில் மைக்கை பிடித்துக் கொண்டு நான், மந்திரிகளின் அலுவலகங்கள் உள்பட எல்லா இடங்களுக்கும் வந்து கேள்விகள் கேட்கிறீர்கள். நாங்கள் ஏதாவது கூட்டங்களில் இருப்போம் அல்லது வேறு மனநிலையில் இருப்போம். திடீரென்று நீங்கள் மைக்கை கொண்டு வந்து எங்களிடம் நீட்டி, ஏதாவது சொல்லுங்கள் என்று சொன்னால் என்ன சொல்வது? நீங்கள் கேட்பது பற்றி எங்களிடம் தகவல்கள் இல்லாமல் இருக்கலாம்.
அதனால் உங்களின் பணிகளை மேற்கொள்ள பத்திரிகையாளர்களுக்காக விதான சவுதாவில் தனி வசதிகள் செய்து கொடுக்கப்படும். மேலும் சில குறிப்பட்ட ஊடகங்களுக்கு மட்டுமே அரசின் திட்டங்கள் தொடர்பான தகவல்கள் கிடைப்பதாக எனக்கு புகார் வந்துள்ளது. இதுபோன்ற விஷயங்களை தவிர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில், அனைத்து வசதிகளுடன் பத்திரிகையாளர்களுக்கு தனி அலுவலக அறை வசதியை ஏற்படுத்தி கொடுக்கும்படி அதிகரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். யாரிடம் தகவல்கள் வேண்டுமோ அவர்களை தொலைபேசியில் வரவழைத்து அவற்றை பெற்றுக்கொள்ளலாம்.” இவ்வாறு குமாரசாமி கூறினார்.