பாசன வாய்க்கால்களை முறையாக தூர்வாரக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல்
குடவாசல் அருகே பாசன வாய்க்கால்களை முறையாக தூர்வாரக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
குடவாசல்,
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள திருக்கண்ணமங்கையில் குடிமராமத்து பணிகள் திட்டம் மூலம் பாசன மற்றும் வடிகால் வாய்க்கால்கள் 7 கி.மீ. தூரம் தூர்வாரப்படுகிறது. இந்த பணியில் வாய்க்கால் சரியாக தூர்வாரப்படாமல் மண்மேடுகள் அப்படியே உள்ளன. இதனால் ஆற்றில் தண்ணீர் வந்தால் வாய்க்கால்களில் தண்ணீர் செல்லாமல் தேங்கியே நிற்கும். இதனால் இப்பகுதியில் விவசாயிகளுக்கு சாகுபடி செய்ய தண்ணீர் கிடைக்காது. எனவே வாய்க்கால்களை முறையாக தூர்வாரக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
போராட்டத்திற்கு விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் மணியன் தலைமை தாங்கினார். சங்க மாவட்ட செயலாளர் தம்புசாமி முன்னிலை வகித்தார். இதில் முன்னாள் ஊராட்சி தலைவர் ஜெயபால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கணேசன், கோபிநாத் மற்றும் விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த திருவாரூர் தாசில்தார் குணசீலி, பொதுப்பணித்துறை அதிகாரி கோவிந்தராஜ், குடவாசல் துணை போலீஸ் சூப்பிரண்டு (பயிற்சி) நந்தகோபால், போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததின் பேரில் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் திருவாரூர்- கும்பகோணம் சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.