ஈரோட்டில் விவசாய தொழிலாளர்கள் தர்ணா போராட்டம்
அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் நேற்று தர்ணா போராட்டம் நடைபெற்றது
ஈரோடு,
100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும். அதில் அரசு நிர்ணயித்த கூலி ரூ.224 முழுமையாக தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் நேற்று தர்ணா போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு சங்க மாவட்ட செயலாளர் சண்முகவள்ளி தலைமை தாங்கினார். இதில் மாநில துணைத்தலைவர் பி.சுப்பிரமணி, மாவட்ட தலைவர் ஆர்.விஜயராகவன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.
போராட்டத்தில் விவசாய தொழிலாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.