ராமேசுவரம்–கோவை இடையே தினசரி ரெயில் இயக்க வேண்டும், மலேசியா பாண்டியன் எம்.எல்.ஏ. கோரிக்கை
ராமேசுவரம்–கோவை இடையே தினசரி ரெயில் இயக்க வேண்டும் என மலேசியா பாண்டியன் எம்.எல்.ஏ. தென்னக ரெயில்வே கோட்ட மேலாளருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார்.
முதுகுளத்தூர்,
ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து ஏராளமான பொதுமக்கள், இளைஞர்கள் வேலைவாய்ப்பு தேடி திருப்பூர், கோவை, ஈரோடு, பழனி என பல்வேறு நகரங்களுக்கு சென்று வருகின்றனர். இந்த நிலையில் ராமேசுவரத்தில் இருந்து வாரந்தோறும் புதன்கிழமை மட்டும் கோவைக்கு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயிலை தினமும் இயக்க வேண்டும் என்று முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மலேசியா பாண்டியன் தென்னக ரெயில்வே கோட்ட மேலாளருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார்.