வியாபாரியை தாக்கி 80 பவுன் நகை கொள்ளை வழக்கில் 3 பேர் கைது
கே.புதுப்பட்டி அருகே நகை வியாபாரியை தாக்கி 80 பவுன் நகைகளை கொள்ளையடித்த வழக்கில், 3 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 32 பவுன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அரிமளம்,
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 40). இவர் காரைக்குடியில் தனது சித்தப்பா வெங்கடாசலம் என்பவருடன் சேர்ந்து நகைக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவர்களில் யாராவது ஒருவர் தினமும் புதுவயல், கே.புதுப்பட்டி, ஆவுடையார்கோவில், அறந்தாங்கி, ஆலங்குடி, திருமயம், புதுக்கோட்டை ஆகிய இடங்களுக்கு காரில் சென்று பழைய நகைகளை வாங்குவதும், புதிய நகைகளை விற்பனை செய்வதுமாக தொழில் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் விக்னேஷ் கடந்த 9-ந் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பல்வேறு நகை கடைகளுக்கு சென்று பழைய நகைகளை வாங்கி கொண்டு, காரில் கே.புதுப்பட்டி வழியாக காரைக்குடி நோக்கி சென்்று கொண்டிருந்தார். கார் கே.புதுப்பட்டி அருகே பாம்பாறு பாலம் அருகே சென்று கொண்டிருந்தபோது, அந்த காரை வழிமறித்த மர்மநபர்கள் விக்கேஷை தாக்கி, அவர் காரில் வைத்திருந்த 80 பவுன் நகைகளை எடுத்து கொண்டு, அவரை அவரது காரிலேயே கடத்தி சென்று, காட்டுப்பகுதியில் காருடன் விட்டு விட்டு தப்பி சென்று விட்டனர். இந்த கொள்ளை சம்பவம் குறித்த புகாரின் பேரில் கே.புதுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விக்னேஷை தாக்கி காரில் இருந்த 80 பவுன் நகைகளை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வந்தனர்.
இதையடுத்து பொன்னமராவதி துணை போலீஸ் சூப்பிரண்டு தமிழ்மாறன் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலையில் அரிமளம் அருகே உள்ள கடையக்குடி ஆலமரம் பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கவுரி, கருணாகரன், மனோகரன் ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீசார் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், காரில் இருந்த 3 பேரும் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார்கள். இதையடுத்து போலீசார் காரை சோதனை செய்தனர். அப்போது காரில் தங்க நகைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து தனிப்படை போலீசார் காரில் இருந்த 3 பேரிடம் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், அவர்கள் தஞ்சாவூர் மாவட்டம் திருமங்களக்கோட்டை பகுதியை சேர்ந்த சத்தியராஜ் (வயது26), குறித்துமலை பகுதியை சேர்ந்த சதீஷ்குமார்(26), திருவிடைமருதூரை சேர்ந்த மாரிமுத்து (37) என்பது தெரியவந்தது. மேலும் இவர்களுக்கு கே.புதுபட்டி அருகே நடந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்பு இருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து தனிப்படை போலீசார் 3 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 32 பவுன் தங்கநகைள் மற்றும் ஒரு காரையும் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் கொடுத்த தகவலின்படி தலைமறைவாக உள்ள 6 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, கே.புதுப்பட்டி கொள்ளை சம்பவத்தில் இதுவரை 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். கைது செய்யப்பட்டு உள்ளவர்களிடம் இருந்து, 32 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் கொடுத்த தகவலின்படி தலைமறைவாக உள்ள 6 பேரை தீவிரமாக தேடி வருகிறோம். தலைமறைவாக உள்ள 6 பேரையும் கைது செய்தால் மீதமுள்ள நகைகள் பறிமுதல் செய்யப்படும்.
மாவட்டத்தில் நடைபெறும் குற்ற சம்பவங்களை தடுக்க போதுமான நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். இருந்தாலும் காவல்துறையே அனைவரது பொருட்களையும் பாதுகாக்க முடியாது. பொதுமக்கள் தான் தங்கள் உடமைகளை பாதுகாத்து கொள்ள வேண்டும். பொதுமக்கள அலட்சியமாக இருந்து திருடர்களுக்கு வழிவகுக்கக் கூடாது. பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க காவல் துறை சார்பில் போதுமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.