குறுவட்ட அளவிலான செஸ் போட்டி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது
குறுவட்ட அளவிலான செஸ் போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாணவர் களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
அரியலூர்,
அரியலூர் மாவட்ட விளையாட்டரங்கில் குறுவட்ட அளவிலான செஸ் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவர்களிடையே செஸ் விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில், பள்ளி கல்வித்துறை சார்பில் 11 வயது 14, 17 மற்றும் 19 வயதிற்கு உட்பட்ட பிரிவுகளில் மாணவ- மாணவிகளுக்கு தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் 242 மாணவர்களும், 154 மாணவிகள் என மொத்தம் 396 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
11 வயதிற்குட்பட்ட பிரிவு போட்டியில் இடையத்தான் குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவி சுஜி முதலிடத்தையும், அரசு நகர் மெட்ரிக்குலேசன் பள்ளி மாணவி லேகாஸ்ரீ இரண்டாம் இடத்தையும், சஷானா மூன்றாம் இடத்தையும் பெற்றனர். இதேபோல் ஒவ்வொரு பிரிவிலும் 3 மாணவ-மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு மாவட்ட அளவில் நடக்கும் போட்டிகளில் பங்கேற்பார்கள். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர் செல்வம் பரிசு, சான்றிதழ் களை வழங்கினார்.
போட்டிகள் அனைத்தும் முறையாக ஏற்பாடு செய்யாமல் நடத்தப்பட்டன. போட்டிகள் அனைத்தும் விளையாட்டரங்கில் நடந்ததால் அனைவரும் அமர்ந்து பார்க்க கூடிய கேலரியில் நடத்தப்பட்டன. இதனால் மாணவர்கள் மிகுந்த சிரமத்துடன் அமர்ந்து போட்டிகளில் பங்கேற்றனர். முறையாக அமர முடியாததால் சில மாணவர்கள் தங்களது கவனத்தை போட்டியில் செலுத்த இயலவில்லை எனவும் தெரிவித்தனர்.
மேலும், மாணவர்கள் அதிகமாக கலந்து கொண்டதால் முறையாக போட்டி நடத்த வில்லை, ஏதோ பெயரளவில் போட்டிகள் நடப்பதாகவும், மாவட்ட நிர்வாகம் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விளையாட்டு ஆர்வலர்களும், பெற்றோர்களும் தெரிவித்தனர்.