5 ஆண்டுகளுக்கு பின்னர் திருச்சியில் கடல் போல் காட்சி அளிக்கும் காவிரி
5 ஆண்டுகளுக்கு பின்னர் திருச்சியில் காவிரி ஆறு கடல் போல் காட்சி அளிக்கிறது. வெள்ள அபாயத்தை தடுக்க கொள்ளிடத்தில் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.
திருச்சி,
கடந்த 10 நாட்களுக்கு முன்பு வரை மணல் பாங்காக வறண்டு போய் காட்சி அளித்த காவிரி ஆறு தற்போது கடல் போல் காட்சி அளிக்கிறது. தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை போதுமான அளவில் பெய்யவில்லை என்றாலும் கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த பேய் மழையால் அங்குள்ள அணைகள் நிரம்பின. கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பியதால் உபரி நீர் காவிரியில் திறந்து விடப்பட்டது. இதன் காரணமாக மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை நேற்று முன்தினம் எட்டியது. மேட்டூர் அணை வரலாற்றில் 39-வது முறையாக நிரம்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக கடந்த 19-ந்தேதி முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தண்ணீர் திறந்து விட்டார்.
கர்நாடகாவில் இருந்து தொடர்ந்து உபரி நீர் அதிகமாக திறந்து விடப்படுவதால் ஒகேனக்கல் பகுதியே வெள்ளக்காடாக காட்சி அளித்து வருகிறது. மேட்டூர் அணை நிரம்பி வழிவதால் அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே காவிரியில் திறந்து விடப்பட்டு வருகிறது. நேற்று மாலை நிலவரப்படி மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 80 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி வருவதால் காவிரியில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.
காவிரி பெருக்கெடுத்து ஓடி வருவதால் முக்கொம்பு மேலணையில் இருந்து நேற்று மாலை 5 மணி அளவில் கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.
முக்கொம்பு மேலணையின் 44-வது மதகில் இருந்து வினாடிக்கு 150 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதையொட்டி அங்கு தேங்காய் உடைத்து சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. லால்குடி வருவாய் கோட்டாட்சியர் பாலாஜி மதகின் வழியாக தண்ணீரை திறந்து விட்டு மலர்களை தூவினார். இதில் பொதுப்பணித்துறை ஆற்றுப்பாதுகாப்பு கோட்டத்தின் உதவி செயற்பொறியாளர் பால்ராஜ், உதவி பொறியாளர் புகழேந்தி உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
முக்கொம்பிற்கு நேற்று மாலை நிலவரப்படி வினாடிக்கு 25 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந்த தண்ணீர் இன்று இரவுக்குள் 75 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 75 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து சேர்ந்ததும் முக்கொம்பில் இருந்து காவிரியில் 35 ஆயிரம் கன அடி தண்ணீர் போக மீதம் உள்ள சுமார் 40 ஆயிரம் கன அடி தண்ணீரும் அப்படியே கொள்ளிடத்தில் திறந்து விடப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.
காவிரியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி வருவது பார்ப்பதற்கு கண் கொள்ளா காட்சியாக உள்ளது. கடந்த 2013-ம் ஆண்டு இதே போல் காவிரியில் தண்ணீர் அதிக அளவில் வந்தது. அதன் பின்னர் இப்போது தான் இரு கரைகளையும் தொட்டபடி தண்ணீர் செல்கிறது. காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து வருவதால் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் மேடான பகுதிக்கு செல்லும்படி திருச்சி மாவட்ட கலெக்டர் ராஜாமணி வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
காவிரியில் தண்ணீர் அதிக அளவில் வருவதால் முக்கொம்பு மேலணையில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதே போல் கம்பரசம் பேட்டை தடுப்பணையிலும் பொதுமக்களை எச்சரிக்கை செய்யும் விதமாக சிவப்பு கொடி கட்டப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. வெள்ளப்பெருக்கின் காரணமாக காவிரியில் யாரும் இறங்கி குளிக்க வேண்டாம் என்ற அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு உள்ளது. ஆனாலும் கடல் அலை போல் பேரிரைச்சலோடு ஓடும் காவிரி நீரை பார்ப்பதற்காக கம்பரசம் பேட்டை தடுப்பணைக்கு ஏராளமான மக்கள் வந்து செல்கிறார்கள்.
ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறையின் அனைத்து படிக்கட்டுகளையும் தொட்டபடி தண்ணீர் செல்வதால் கோவிலுக்கு வரும் பக்தர்கள், புனித நீராடுவதற்காக வருபவர்கள் இரும்பு கம்பிகளால் தடுப்பு ஏற்படுத்தப்பட்ட பகுதியில் மட்டுமே குளிப்பதற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். மற்ற இடங்களில் எல்லாம் சவுக்கு கட்டைகளால் தடுப்பு வேலி அமைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. ஸ்ரீரங்கம் கருட மண்டபம் படித்துறையும் மூடப்பட்டு விட்டது. ஓயா மரிசுடுகாடு அருகே உள்ள தில்லை நாயகம் படித்துறையிலும் பொதுமக்கள் இறங்கி குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.