ஏரி, குளங்களில் முழுமையாக தண்ணீரை நிரப்ப வேண்டும் மாவட்ட வருவாய் அலுவலரிடம் கோரிக்கை
ஏரி, குளங்களில் முழுமையாக தண்ணீரை நிரப்ப வேண்டும் என்று மாவட்ட வருவாய் அலுவலரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
தஞ்சாவூர்,
அதிராம்பட்டினம் நீர்நிலை பாதுகாப்பு அறக்கட்டளை நிர்வாகிகள் பலர் தஞ்சை கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று வந்தனர். பின்னர் அவர்கள் மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேலிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
அதில், கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக ஆற்றுநீர் வராததால் அதிராம்பட்டினம் மற்றும் அதை சுற்றியுள்ள ஏரிப்புறக்கரை, மகிழங்கோட்டை, மிலாரிக்காடு, நடுவிக்காடு, நரசிங்கபுரம் உள்ளிட்ட 20-க்கும் அதிகமான கிராமப்பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட குளங்கள் தண்ணீரின்றி வறண்டு காணப்படுகிறது. விவசாய பணிகளும் முடங்கியுள்ளன. தஞ்சை மாவட்டத்தின் கடலோர பகுதியான அதிராம்பட்டினத்தில் அதிக அளவில் மீனவர்கள் மற்றும் விவசாயிகள் வாழ்ந்து வருகின்றனர்.
இப்பகுதியில் பல இடங்களில் நிலத்தடி நீர், உப்பு நீராக மாறிவிட்டது. இதனால் பொதுமக்கள் அன்றாட தேவைக்கு இந்த தண்ணீரை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளனர். தற்போது மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீரை பயன்படுத்தி காட்டுக்குளம், மரைக்காகுளம், செக்கடி குளம், செட்டியாகுளம், புதுப்பள்ளி குளம், ஆலடிக்குளம், கரிசல்மணி குளம், மின்னப்பங்குளம், பிள்ளைகுளம், யானையன்குளம், வெள்ளைக்குளம், மரைக்கா பள்ளிவாசல் குளம், ஓட்டைக்குளம், செடியன்குளம், புதுக்குளம், பெரிய ஏரி, சின்ன ஏரி போன்றவற்றில் முழுமையாக தண்ணீரை நிரப்ப வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
தஞ்சையை அடுத்த பூதலூர் தாலுகா அய்யனாபுரம் ரோட்டில் வசித்து வரும் 20-க்கும் மேற்பட்டோர் மாவட்ட வருவாய் அலுவலரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில், நாங்கள் கடந்த 22 ஆண்டுகளாக அய்யனாபுரம் ரோட்டில் வசித்து வருகிறோம். 60 வீடுகளும், கடைகளும் உள்ளன. இந்த நிலையில் திருக்காட்டுப்பள்ளி-செங்கிப்பட்டி-பட்டுக்கோட்டை சாலை விரிவாக்க பணிக்காக எங்களை எல்லாம் வீடுகளையும், கடைகளையும் விட்டு காலி செய்ய வேண்டும். அப்படி காலி செய்யவில்லை என்றால் வருகிற 1-ந் தேதி போலீசார், வருவாய்த்துறையினர் உதவியுடன் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என நெடுஞ்சாலைத்துறையினர் நோட்டீசு அனுப்பியுள்ளனர். மின்கட்டணம், வீட்டுவரி எல்லாம் முறையாக கட்டி வருகிறோம். எங்களை இந்த இடத்தை விட்டு காலி செய்ய சொன்னால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே யாரும் பாதிக்காத வகையில் சாலை விரிவாக்க பணியை மேற்கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.