பிளஸ்–2 துணை தேர்வு எழுதிய தனித்தேர்வர்கள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம்

பிளஸ்–2 துணை தேர்வு எழுதிய தனித்தேர்வர்கள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி தெரிவித்துள்ளார்.

Update: 2018-07-23 22:00 GMT

சிவகங்கை,

மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி குயின் எலிசபெத் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

பிளஸ்–2 சிறப்பு துணை தேர்வு எழுதிய தனித்தேர்வர்கள்(தட்கல் உள்பட) தேர்வு முடிவினை, தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களாகவே இன்று (செவ்வாய்கிழமை) பிற்பகல் முதல் www.dge.tn.nic.in இணையதளத்திற்கு சென்று தங்களது பதிவெண் மற்றும் பிறந்ததேதியை பதிவு செய்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மேலும் சிறப்பு துணை தேர்வுக்கான விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் உரிய முதன்மைக்கல்வி அலுவலர் அலுவலகத்திற்கு நாளையும், நாளை மறுநாளும் நேரில் சென்று உரிய கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ளவேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்