கரூரில் 4-வது நாளாக லாரிகள் இயக்கப்படாததால் ஜவுளி- கொசுவலைகள் தேக்கம்
கரூரில் 4-வது நாளாக லாரிகள் இயக்கப்படாததால் ஜவுளி- கொசுவலைகள் உள்ளிட்ட பல்வேறு உற்பத்தி பொருட்கள் தேக்கம் அடைந்தன. இதனால் வர்த்தகம் பாதிக்கப்பட்டதால் தொழில் நிறுவன உரிமையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.
கரூர்,
டீசல் விலை உயர்வு, சுங்க சாவடிகளில் அதிக கட்டணம் வசூல் செய்யப்படுவது உள்ளிட்டவற்றை கண்டித்து இந்தியா முழுவதும் கடந்த 20-ந் தேதி முதல் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் கரூர் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் 2,000 லாரிகள், 600 மினி லாரிகள் மற்றும் சரக்கு வேன்கள் உள்ளிட்டவை நேற்று 4-வது நாளாக இயக்கப்படாமல் உள்ளன. இதனால் தொழில் நகரமான கரூரில் டெக்ஸ்டைல் ஜவுளிகள், கைத்தறி துணிகள், பஸ்பாடி மற்றும் ஆலைகளில் தயாரிக்கப்படும் சர்க்கரை, சிமெண்டு, பேப்பர் கட்டுகள் மற்றும் விளைச்சல் பொருட்களான வாழைத்தார், சின்னவெங்காயம், சோளம், நெல் உள்ளிட்டவற்றை ஏற்றுமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அவை தேக்கம் அடைந்துள்ளதால் கோடிக்கணக்கில் வர்த்தகம் முடங்கியதால் தொழில்நிறுவன உரிமையாளர்கள், விவசாயிகள் உள்ளிட்டோர் கவலை அடைந்துள்ளனர்.
இதனால் லாரிகள் வேலை நிறுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்படுவது எப்போது? என அவர்கள் எதிர்பார்க்கின்றனர். இந்த போராட்டத்தின் காரணமாக பல்வேறு லாரி டிரைவர்களும் வேலையில்லாததால் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். எனினும் லாரி உரிமையாளர்கள் உள்ளிட்டோர் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் எனில் எங்களது கோரிக்கைகளுக்கு மத்திய- மாநில அரசுகள் செவி சாய்க்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றனர். இதன் காரணமாக கரூர் ரெயில் நிலைய பார்சல் சேவை, பஸ் டிரான்ஸ்போர்ட் சேவை உள்ளிட்டவற்றின் மூலமாக உற்பத்தி பொருட்கள் ஏற்றுமதி மற்றும் மூலப்பொருட்களை இறக்குமதி செய்வது உள்ளிட்டவற்றில் சிலர் ஈடுபடுவதையும் காண முடிந்தது.
கரூரில் தயாரிக்கப்படும் கொசுவலைகளுக்கு வெளிமாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் தனி மவுசு உண்டு. எனினும் தற்போது ஜி.எஸ்.டி. வரி, மேற்கு வங்கம் வழியாக கொசுவலை இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படுவது உள்ளிட்டவற்றால் கரூரில் கொசுவலை தொழிலில் சிறிய அளவிலான சறுக்கல் ஏற்பட்டுள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் லாரிகள் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக கொசுவலை தேக்கமடைவதால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து தமிழ்நாடு கொசுவலை துணி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் கரூரை சேர்ந்த சி.சுரேஷ்குமாரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
பீகார் மாநிலம் பாட்னா, மும்பை, டெல்லி, கொல்கத்தா, அகமதாபாத் உள்ளிட்ட இந்தியாவின் முக்கிய நகரங்களில் கரூர் கொசுவலைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு விற்பனை நடக்கிறது. பெரும்பாலும் கொசுவலைகள் லாரிகள் மூலம் தான் அந்த நகரங்களுக்கு கொண்டுசெல்லப்படுகிறது. தற்போது லாரிகள் இயக்கப்படாததால் ரூ.20 கோடி அளவில் கொசுவலைகள் கரூரில் தேக்கம் அடைந்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்களிடம் குறித்த நேரத்தில் உற்பத்தி பொருளை கொடுக்க முடியவில்லை. மேலும் பாலிஎத்திலின் உள்ளிட்ட மூலப்பொருளை வெளியிடங்களில் இருந்து வாங்கி வர முடியாததால் கொசுவலை தயாரிப்பிலும் தொய்வு ஏற்பட்டுள்ளது. எனவே லாரி உரிமையாளர்கள் போராட்டத்திற்கு மத்திய -மாநில அரசுகள் விரைவில் தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.