சென்னையில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை
சென்னையில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. #Rain
சென்னை,
சென்னையில் இன்று இலேசான காற்றுடன் வானம் மேகமூட்டங்களாக இருந்த நிலையில், இன்று மாலை திடீரென மழை பெய்தது. சூளைமேடு, வளசரவாக்கம், குரோம்பேட்டை, தாம்பரம், ராயபுரம், வில்லிவாக்கம், எழும்பூர், புரசைவாக்கம், செண்ட்ரல், சிந்தாரிப்பேட்டை ஆகிய இடங்களில் மழை பெய்தது.
இந்த திடீர் மழை, சென்னையில் கடந்த சில நாட்களாக நிலவி வந்த புழுக்கமான சூழலில் இருந்து மக்களை சற்று இளைப்பாற்றும் வகையில் அமைந்தது.