நிபந்தனையின்றி பயிர்க்கடன் வழங்க வேண்டும் விவசாயிகள் வலியுறுத்தல்
நிபந்தனையின்றி பயிர்க்கடன் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தினர்.
தஞ்சாவூர்,
காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்காக கல்லணையில் இருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய், கொள்ளிடத்தில் தண்ணீர் திறந்துவிடப் பட்டது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர்களிடம் பயிர்க்கடன் வழங்குதல், விதைநெல், உரம் தட்டுப்பாடு இன்றி கிடைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் அளித்தனர்.
தமிழ்நாடு ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்க மாநில தலைவர் விஸ்வநாதன் கூறும்போது, ஆறுகள், ஏரிகள், கால்வாய்களை முன்கூட்டியே தூர்வாரி இருந்தால் நன்றாக இருந்திருக்கும். தண்ணீர் அதிகமாக வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தண்ணீர் கடைமடை பகுதி வரை செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். தண்ணீர் மட்டும் கிடைத்தால் போதாது. உடனே விவசாயிகளுக்கு எந்த நிபந்தனையும் இன்றி பயிர்க்கடன் வழங்க வேண்டும்.
அதிகமாக வரும் தண்ணீர் கடலில் சென்று கலப்பதை தடுக்க ஏரிகளிலும், குளங்களிலும் தண்ணீர் நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நாகை மாவட்டம் குமாரமங்கலம்-ஆதனூர் இடையே தடுப்பணை ரூ.400 கோடியில் கட்டப்படும் என மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஏற்கனவே அறிவித்து இருந்தார். ஆனால் அந்த திட்டத்தை செயல்படுத்த தற்போதைய அரசு எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. விரைவாக தடுப்பணை கட்ட முயற்சி எடுக்க வேண்டும் என்றார்.
காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க பொதுச் செயலாளர் தனபாலன் கூறும்போது, 2013-ம் ஆண்டுக்கு பிறகு தண்ணீர் அதிகமாக வருகிறது. மேட்டூர் அணையில் இருந்து 20 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் கடைமடை பகுதி வரை செல்ல நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஆறுகள், ஏரிகள், கால்வாய்கள் தூர்வாரும் பணி 5 சதவீதம் கூட நடை பெறவில்லை. தற்போது திறந்துவிடப்பட்டுள்ள தண்ணீரால் நிலத்தடி நீர் மட்டம் உயரும். அடுத்தமாதம் சம்பா சாகுபடி பணியை தொடங்கும் வகையில் விதைநெல் இருப்பு வைக்க வேண்டும். குறுவை தொகுப்பு திட்டம் அறிவிக்கப்பட்டதை போல சம்பா தொகுப்பு திட்டத்தை அறிவிக்க வேண்டும். ஆற்றின் கரைகளை பலப்படுத்த வேண்டும் என்றார்.