உளுந்தூர்பேட்டை அருகே புதிய கிராம சேவை மைய கட்டிடம்: அமைச்சர் சி.வி.சண்முகம் திறந்து வைத்தார்
உளுந்தூர்பேட்டை அருகே புதிய கிராம சேவை மைய கட்டிடத்தை அமைச்சர் சி.வி.சண்முகம் திறந்து வைத்தார்
உளுந்தூர்பேட்டை,
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள நொனையவாடி கிராமத்தில் ரூ.15 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட கிராம சேவை மைய கட்டிடத்தின் திறப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். விழுப்புரம் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான குமரகுரு முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்து கொண்டு கிராம சேவை மைய கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
அப்போது மாவட்ட திட்ட இயக்குனர் மகேந்திரன், ஒன்றிய செயலாளர் வக்கீல் மணிராஜ், நகர செயலாளர் துரை, முன்னாள் ஒன்றியக்குழு துணைத் தலைவர் சாய்ராம், மாநில பொதுக்குழு உறுப்பினர் பாண்டியராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நந்தகோபாலகிருஷ்ணன், திருமால், முன்னாள் கவுன்சிலர் ராமலிங்கம், நகர துணை செயலாளர் கஜேந்திரன், முன்னாள் ஒன்றிய செயலாளர் பழனிவேல், அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆறுமுகம், பாண்டியன், ராமசாமி, பாபு, அதையூர் சுப்புராயன், செல்வராஜ், ராஜேந்திரன் மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.