தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் அண்ணாமலை பல்கலைக்கழக வளாகத்தில் சுத்தம் செய்யும் பணி
தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வளாக பகுதிகளை சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது.
சிதம்பரம்,
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பல்கலைக்கழகத்தில் உள்ள அனைத்து துறை வளாகங்கள், அலுவலக வளாகங்களை சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. இதன் தொடக்க நிகழ்ச்சியில் பல்கலைக்கழக துணை வேந்தர் முருகேசன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் ஆகியோர் கலந்து கொண்டு சுத்தம் செய்யும் பணியை தொடங்கி வைத்தனர்.
அப்போது துணை வேந்தர் முருகேசன் பேசுகையில், பல்கலைக்கழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளையும் குப்பை இல்லா வளாகமாக மாற்றும் வகையில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள், ஊழியர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுவார்கள் என்று தெரிவித்தார். போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் பேசுகையில், தூய்மை இந்தியா திட்ட பணியில் அண்ணாமலை பல்கலைக்கழகம் முன்மாதிரியாக திகழ வேண்டும் என்று தெரிவித்தார்.
முன்னதாக நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் சவுந்தரபாண்டியன் வரவேற்றார். நிகழ்ச்சியில் துணை வேந்தர் முருகேசன் தலைமையில் அனைவரும் தூய்மை இந்தியா திட்டம் தொடர்பான உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்.
இதில் பல்கலைக்கழக பதிவாளர்(பொறுப்பு) ஆறுமுகம், மொழிப்புல முதல்வர் மற்றும் ஆட்சிக்குழு உறுப்பினர் திருவள்ளுவன், புல முதல்வர்கள், பல்வேறு துறை தலைவர்கள், மாணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.