8 வழி பசுமைச்சாலையை எதிர்த்து மக்களுடன் இணைந்து போராடுவோம் டி.டி.வி.தினகரன் பேச்சு
8 வழி பசுமைச்சாலை திட்டத்தை எதிர்த்து மக்களுடன் இணைந்து போராடுவோம் என்று அரூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. பேசினார்.
அரூர்,
தர்மபுரி மாவட்டம் அரூரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் 8 வழி பசுமைச்சாலை திட்டத்தை செயல்படுத்த எதிர்ப்பு தெரிவித்து நேற்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைமை நிலைய செயலாளர் பி.பழனியப்பன் தலைமை தாங்கினார். எம்.ஜி.ஆர். மன்ற மாநில துணை செயலாளர் ஆர்.ஆர்.முருகன் வரவேற்றார். மாவட்ட செயலாளர் டி.கே.ராஜேந்திரன், அவைத்தலைவர் அன்பழகன், கட்சியின் பொருளாளர் ரங்கசாமி, கட்சியின் மாநில நிர்வாகிகள் தங்க தமிழ்ச்செல்வன், செந்தில்பாலாஜி, எஸ்.கே.செல்வம், வெங்கடாசலம், புகழேந்தி உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கட்சியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
சேலம்-சென்னை இடையே அமைக்கப்பட உள்ள 8 வழி பசுமைச்சாலை திட்டத்தை பொதுமக்களும், விவசாயிகளும் கேட்கவில்லை. மஞ்சவாடி கணவாயில் இருந்து வரும் போது என்னை சந்தித்த இளைஞர்கள் எப்பாடு பட்டாவது சாலை அமைக்கும் திட்டத்தை தடுத்து நிறுத்துங்கள். இதுவே மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு செலுத்தும் நன்றியாக இருக்கும். இந்த திட்டம் எங்களுக்கு வேண்டாம் என்று என்னிடம் கோரிக்கை விடுத்தனர்.
மக்கள் விருப்பத்திற்கு எதிரான இந்த திட்டம் முதல்-அமைச்சர் மற்றும் அவருடைய உறவினர்களுக்கு மட்டுமே பயனளிக்கும். சேலம்- அரூர், திருப்பத்தூர், வாணியம்பாடி வழியாக சென்னைக்கு 4 வழிச்சாலை அமைக்கும் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டதின் பேரில் உடனடியாக மத்திய அரசு இந்த 8 வழி பசுமைச்சாலை திட்டத்திற்கு ரூ.10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்த சாலை அமைப்பதற்கான முக்கிய காரணம் என்னவென்றால் கல்வராயன் மலை, கஞ்சமலை, கவுத்திமலை ஆகிய பகுதிகளில் உள்ள இரும்பு தாது வடநாட்டை சேர்ந்த தனியாருக்கு தாரை வார்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த கனிம வளங்களை எளிதாக கொண்டு செல்ல இந்த சாலை அமைக்கப்படுகிறது. தமிழ்நாட்டு மக்களை ஏமாற்ற முடியாது. மக்கள் நலனுக்கு எதிராக செயல்படும் இந்த ஆட்சிக்கு முட்டை வடிவில் அணுகுண்டு வந்துள்ளது. இந்த அணுகுண்டு நிச்சயமாக தற்போதைய ஆட்சியாளர்களுக்கு பிரச்சினையை ஏற்படுத்தும்.
வருமான வரித்துறை சோதனையின் மூலமாக அமைச்சர்கள் அச்சம் அடைந்துள்ளனர். மின்சார துறையில் வடமாநிலத்தை சேர்ந்த ஒரு நிறுவனத்திற்கு விதிமுறையை மீறி டெண்டர் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதை தடுக்க மின்துறை அமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று நான் அறிக்கை வெளியிட்டு உள்ளேன்.
வருகிற பாராளுமன்ற தேர்தலில் மக்கள் இதற்கு சரியான பதில் அளிப்பார்கள். 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கில் தீர்ப்பு வருவதற்கு முன்பாகவே இந்த ஆட்சிக்கு முடிவு வர வாய்ப்பு உள்ளது. எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் மடியில் கனம் உள்ளது. துரோகிகள் நீண்ட காலம் ஆட்சி அதிகாரத்தில் இருக்க முடியாது. உண்மை தொண்டர்கள் நம்மிடம் உள்ளனர். இந்த 8 வழி பசுமைச்சாலை திட்டத்தை எதிர்த்து மக்களுடன் இணைந்து தொடர்ந்து போராடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் அரூர் ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் தென்னரசு, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சேகர், விவசாய சங்க தலைவர் சரவணன், அரசு போக்குவரத்து கழக சங்க நிர்வாகி பிரகாசம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். முடிவில் அரூர் நகர செயலாளர் திருவேங்கடம் நன்றி கூறினார்.