தமிழகத்துக்கு வினாடிக்கு 80 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறப்பு கே.ஆர்.எஸ். அணையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 80 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்தவிடப்பட்டுள்ளது. கே.ஆர்.எஸ். அணையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
மைசூரு,
கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 80 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்தவிடப்பட்டுள்ளது. கே.ஆர்.எஸ். அணையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
தென்மேற்கு பருவமழைகர்நாடகத்தில் கடந்த மே மாதம் இறுதியில் இருந்து தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இதனால் கர்நாடக கடலோர மாவட்டங்களான தட்சிண கன்னடா, உடுப்பி, கார்வார், மலைநாடுகளான குடகு, சிக்கமகளூரு, சிவமொக்கா மற்றும் பெங்களூரு ஆகிய பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக கர்நாடக முக்கிய அணைகளான மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா பீச்சனஹள்ளி பகுதியில் அமைந்துள்ள கபினி அணையும், மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடி பகுதியில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்.) அணையும் முழுகொள்ளளவை எட்டின.
2 அணைகளில் இருந்தும் வினாடிக்கு 1 லட்சம் கனஅடி வீதம் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. இதனால், காவிரி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. 2 அணைகளும் முழுகொள்ளளவையும் எட்டியதால், கடந்த 20–ந்தேதி முதல்–மந்திரி குமாரசாமி அணைகளில் சிறப்பு பூஜை செய்து வழிபட்டார்.
வினாடிக்கு 80 ஆயிரம் கனஅடி தண்ணீர்இந்த நிலையில் நேற்று காலை நிலவரப்படி 124.80 அடி உயரம் கொண்ட கே.ஆர்.எஸ். அணையில் 123.25 அடி தண்ணீர் இருந்தது. அணைக்கு வினாடிக்கு 31,534 கனஅடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 48,859 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதேபோல கடல் மட்டத்தில் இருந்து 2,284 அடி கொள்ளளவு கொண்ட கபினி அணையில் 2,282 கனஅடி தண்ணீர் இருப்பு இருந்தது. அணைக்கு வினாடிக்கு 31,500 கனஅடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 31,500 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
2 அணைகளில் இருந்தும் தமிழகத்துக்கு வினாடிக்கு 80,359 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
சுற்றுலா பயணிகள் குவிந்தனர்கே.ஆர்.எஸ்., கபினி அணைகள் முழுகொள்ளளவை எட்டியுள்ளதால் அங்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. நேற்று விடுமுறை தினம் என்பதால் 2 அணைகளிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். கே.ஆர்.எஸ். அணையில் மதகுகள் பகுதியில் கலர் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளதால், அணையில் இருந்து தண்ணீர் வெளியேறும்போது கண்கொள்ளா காட்சியாக இருக்கிறது. சுற்றுலா பயணிகள் அதனை பார்த்து ரசித்தனர். மேலும் அவர்கள் செல்பி படம் எடுத்தும் மகிழ்ந்தனர்.