தினம் ஒரு தகவல் : ஜெர்மன் மக்களின் நாட்டுப்பற்று
முதல் உலகப் போரில் ஜெர்மனி தோற்றது. வழக்கம்போல போரில் தோற்ற மக்களின் தாய்நில வளங்களை, வென்ற மக்கள் பங்குபோட்டுக் கொண்டனர்.
15ஆண்டுகளுக்குப் பிறகு வாக்கெடுப்பு நடத்தப்படும் என்ற வாக்குறுதியோடு ஸார் பகுதி ஜெர்மனியிடம் இருந்து பறிக்கப்பட்டது. 15 ஆண்டுகள் வென்ற நாடுகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. போரில் வென்ற பிரான்சு நிலக்கரியை தாராளமாக அள்ளிக்கொண்டிருந்தது. அப்பகுதி ஜெர்மானியர்கள் ஓரளவு வேலைவாய்ப்பு கிடைத்து நொடிந்துபோகாத வாழ்க்கையைப் பெற்றனர்.
ஆனால் ஜெர்மனியின் நிலையோ மிக மோசமாக இருந்தது. அங்கே போருக்கு முன் ஒருவரின் மாத சம்பளம் மிக தாராளமாக செலவு செய்யும் விதத்தில் இருந்தது. போருக்குப் பிறகு ஒரு நாளுக்குக்கூட அந்த சம்பளம் போதவில்லை. நாடே சின்னாபின்னமாகிக் கிடந்தது.
முதல் உலகப் போரில் தாய்மண்ணைக் காக்க ஆஸ்திரியா நாட்டில் இருந்து வந்து போர்வீரனாகச் சேர்ந்து போராடிய ஹிட்லர் நாஜிக் கட்சியின் தலைவனாக ஆட்சியைப் பிடித்து ஜெர்மனியை மெல்ல மெல்ல சீர்செய்து கொண்டிருந்தார். 15 ஆண்டுகள் முடியும் தருவாயில் ஸார் பகுதியில் கம்யூனிஸ்டு களும், கத்தோலிக்கர்களும், பிரான்சு முதலாளிகளும், ஜெர்மானிய மக்களிடம் வாக்கெடுப்பின் மூலம் ஜெர்மனியுடன் இணையவேண்டாம் என்று தீவிர பரப்புரை செய்தனர். நாஜிக் கட்சியினர் யூதர்களை ஒடுக்கிவருவதைக் காட்டி அவர்கள் பேச்சைக் கேட்கவேண்டாம் என்றும் கூறினர்.
வாக்கெடுப்பு நாளும் வந்தது. யாருமே எதிர்பார்க்காத வண்ணம் 90 சதவீதம் பேர் ஜெர்மனியுடன் இணைய வாக்களித் தனர். ஸார் பகுதியில் இருந்து வாழ்க்கை தேடி வெளியேறிய ஜெர்மானியர் பலரும் பெருமுயற்சி செய்து பல்வேறு வெளிநாடுகளில் இருந்து வந்து வாக்களித்தனர். நோயாளிகள் நாஜிக்கட்சியினரின் உதவியுடன் சென்று வாக்களித்தனர். வயதான ஒரு பெண்மணி ஷாங்காயில் இருந்து பெர்லின் வந்தார். 16 நாட்கள் தொடர்வண்டிப் பயணம் செய்த அவர் பெர்லினுக்கு வாக்கெடுப்பின் கடைசிநாளில் வந்துசேர்ந்தார்.
1935-ம் ஆண்டு மார்ச் மாதம் 1-ந்தேதி, ஸார் பகுதி ஜெர்மனியுடன் மீண்டும் இணைந்தது. இணைந்த பிறகு வென்ற நாடுகளின் கூட்டணி சொன்ன அத்தனையும் நடந்தது. வறுமை வந்தது, நாஜிக்களின் ஆதரவாளர் என்ற விமர்சனம் வந்தது. போர் வந்தது, அழிவு வந்தது, அத்தனையும் அறிந்துதான் அவர்கள் ஜெர்மனியுடன் இணைந்தனர். கதை இங்கே முடியவில்லை. இரண்டாம் உலகப் போரில் மீண்டும் ஜெர்மனி தோற்றது. முதல் உலகப் போரைவிட மிகப்பெரிய சேதம். அப்போதும் ஸார் பகுதி ஜெர்மனியிடம் இருந்து பறிக்கப்பட்டது. 1947-1956 காலகட்டத்தில் தன்னாட்சி பெற்ற பகுதியாக பிரான்சு அரசின் கீழ் வந்தது.
அதே பழைய நிலை, ஜெர்மனி சின்னாபின்னமாகிக் கிடந்தது. 1955-ல் ‘மேற்கு ஐரோப்பிய கூட்டணியின்’ கீழ் ஸார் பகுதி தனி நாடாக அறிவிக்க வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. 68 சதம் ஜெர்மனியுடன்தான் இணைவோம் என்று வாக்களித்தனர். வென்ற நாடுகள் தூக்கிப்போட்ட எலும்புத் துண்டுகளுக்காக ஜெர்மானிய மக்கள் வாலாட்டவில்லை. வல்லரசுகளின் அத்தனை தந்திரங்களும் ஜெர்மானியரின் இனப்பற்றுக்கு முன்னே தோற்றுப்போனது. ஜெர்மானியரின் தாய் நாட்டுப் பற்றே இத்தனைக்கும் காரணம்.