மானிய விலையில் பெட்ரோல், டீசல் வழங்கக்கோரி தர்மபுரியில் ஆட்டோ டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்
மானிய விலையில் பெட்ரோல், டீசல் வழங்கக்கோரி தர்மபுரியில் ஆட்டோ டிரைவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்மபுரி,
பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்தும், கோரிக்கைகளை வலியுறுத்தியும், தர்மபுரி மாவட்ட சி.ஐ.டி.யு. ஆட்டோ டிரைவர்கள் மற்றும் தொழிலாளர் சங்கம் சார்பில் தர்மபுரி தொலைபேசி நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் ராஜகோபால் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், போக்குவரத்து செயலாளர் ரகுபதி, ஒன்றிய நிர்வாகி குப்புசாமி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.
ஆர்ப்பாட்டத்தில், பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய அரசு திரும்பபெற வேண்டும். டீசல், பெட்ரோல் விலை நிர்ணயத்தை அரசே நேரடியாக தீர்மானிக்க வேண்டும். இவற்றின் விலையை ஜி.எஸ்.டி. வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும். மீனவர்களுக்கு வழங்கப்படுவதை போல் ஆட்டோ டிரைவர்களுக்கும் மானிய விலையில் பெட்ரோல், டீசல் வழங்க வேண்டும்.
காப்பீட்டு கட்டண உயர்வை உடனடியாக திரும்பபெற வேண்டும். மாவட்ட எல்லைகளில் உள்ள ஆட்டோ நிறுத்தங்களில் இருந்து செயல்படும் ஆட்டோக்கள் பக்கத்து மாவட்டங்களுக்குள் சென்று வர உரிய அனுமதி அளிக்க வேண்டும். தர்மபுரி மாவட்டத்தில் புதிய ஆட்டோக்களுக்கு பர்மிட் வழங்குவதை கட்டுப்படுத்த வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள் ஆறுமுகபாண்டியன், சக்திவேல், மாது உள்பட ஆட்டோ டிரைவர்கள், தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.