பெண் சத்துணவு பணியாளர் உணவு சமைத்ததால் மாணவர்கள் வருகை குறைந்தது
திருமலைக்கவுண்டன்பாளையம் பள்ளியில் தீண்டாமை பிரச்சினை தொடர்பாக பெண் சத்துணவு பணியாளர் உணவு சமைத்ததால் மாணவர்கள் வருகை குறைந்தது.
திருப்பூர்,
இதை தொடர்ந்து பாப்பாள் அந்த பள்ளியில் உணவு சமைத்து வருகிறார். இந்த பள்ளியில் 75 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தநிலையில் பள்ளிக்கு நேற்று 32 மாணவ-மாணவிகள் மட்டுமே வந்தனர். இவர்கள் அனைவரும் சத்துணவை சாப்பிட்டனர். ஆனால் 43 மாணவ-மாணவிகள் பள்ளிக்கு வரவில்லை. இதனால் மாணவர்கள் வருகை குறைந்தது.
எனவே மாணவர் வருகை குறைவிற்கான காரணம் என்ன? பாப்பாள் மீண்டும் உணவு சமைத்ததால் அந்த பகுதியை சேர்ந்த பெற்றோர் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுக்கிறார்களா? என்று அதிகாரிகள் விசாரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில பொதுச்செயலாளர் சாமுவேல்ராஜ் மற்றும் ஆதித்தமிழர் பேரவை நிறுவனத்தலைவர் அதியமான் ஆகியோர் திருமலைக்கவுண்டன்பாளையம் வந்தனர். அவர்கள் சத்துணவு பணியாளர் பாப்பாளை சந்தித்து நடந்த பிரச்சினை குறித்து கேட்டறிந்தனர். பின்னர் அதியமான் நிருபர்களிடம் கூறியதாவது:-
தீண்டாமை ஒரு குற்றம், பாவம் என்று அனைத்து பாடப்புத்தகங்களிலும் முதல் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது. அப்படி இருந்தும் அவினாசி அருகே தீண்டாமை கொடுமை நிகழ்ந்துள்ளது. அது அவினாசி பகுதியில் மட்டுமல்ல தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் நிறைந்துள்ளது. இந்த பிரச்சினையில் பணியிட மாறுதல் செய்த அதிகாரியின் செயல் வன்மையாக கண்டிக்க தக்கது. அந்த அதிகாரி மீது துறை ரீதியான நடவடிக்கை மட்டுமல்ல சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகள் மீதும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். சட்டப்படி அவர்களுக்கு தண்டனை கிடைத்தால் மட்டுமே இது போன்ற நிகழ்வுகளை தடுக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்த சேவூர் அருகே உள்ள திருமலைக்கவுண்டன்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் சத்துணவு பணியாளராக பாப்பாள் (வயது 42) பணியாற்றி வருகிறார். தீண்டாமை கொடுமை காரணமாக அவர், அந்த பள்ளியில் சமையல் செய்ய எதிர்ப்பு கிளம்பியது. இந்த பிரச்சினை தொடர்பாக அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இடமாற்றம் செய்யப்பட்ட பாப்பாள் மீண்டும் திருமலைக் கவுண்டன்பாளையம் பள்ளியிலேயே பணியமர்த்தப்பட்டார்.
எனவே அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.