திருவள்ளூர் அருகே பெண்ணை தாக்கிய வாலிபர் கைது
திருவள்ளூர் அருகே பெண்ணை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
திருவள்ளூர்,
திருவள்ளூர் நேதாஜி தெருவை சேர்ந்தவர் பால்ராஜ். இவரது மனைவி மேரி (வயது45). நேற்று முன்தினம் மேரி தனது உறவினர் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அவர் திருவள்ளூர் வி.எம்.நகர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அங்கு வந்த அதிகத்தூரை சேர்ந்த முரளி (21) என்பவர் மேரியை வழிமறித்து தகாத வார்த்தையால் பேசி திடீரென தாக்கிவிட்டு தப்பிச்சென்று விட்டார்.
இது குறித்து மேரி திருவள்ளூர் டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து முரளியை கைது செய்து அவரிடம் விசாரித்து வருகின்றனர்.